TA/Prabhupada 0967 - கடவுளை கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கு, நாம் நமது புலன்களை தூய்மைப்படுத்த வேண்டும்

Revision as of 13:08, 14 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0967 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720527 - Lecture BG The Yoga System - Los Angeles

தூய பக்தர் ஒவ்வொரு கணமும் கிருஷ்ணரை பார்க்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஸந்த: ஸதைவ (பிச. 5.38). ஸதைவ என்றால் ஒவ்வொரு கணமும். அவர் பார்க்கிறார், அப்படி என்றால் அவர் மாறுபட்ட மனிதர். அவருடைய புலன்கள் தூய்மையாக உள்ளது. வெளிச்சமாக உள்ளது. புனிதமாக உள்ளது. அதனால்தான் அவரால் பார்க்க முடிகிறது. ஒருவருடைய கண்கள், புனிதமாகவும் தூய்மையாகவும் இல்லை என்றால், அவரால் பார்க்க முடியாது. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஒரு இயந்திரத்தைப் போல. அதனை ஒரு குழந்தை பார்த்தால் அவனால் அதை சரியாக பார்க்க முடியாது. அது ஏதோ ஒரு உலோக துண்டு போல தான் தெரியும். ஆனால் அதனையே ஒரு பொறியாளர் பார்த்தால், உடனடியாக புரிந்து கொள்வார் இந்த இயந்திரம் இதனால் செய்யப்பட்டிருக்கிறது, இது எப்படி வேலை செய்யும், இது நல்லது, கெட்டது என்றெல்லாம். அவர் மாறுபட்ட வழியில் புரிந்து கொள்வார் ஏனென்றால் அவருக்கு அத்தகைய கண்கள் இருக்கின்றன. அதுபோலதான் கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கு, நம் புலன்களை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். அது நாரத பாஞ்சராத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஸர்வோபாதி-வினிர்முக்தம் (சை.ச. மத்திய 19.170). அனைத்து பதவிகளில் இருந்தும் விடுபடும் பொழுது. கிருஷ்ண உணர்வினை நாம் பார்ப்பது போல, கிருஷ்ண உணர்வினை ஒரு பார்வையாக ஏற்றுக்கொள்வது போல. மற்றவர் சாதாரண மனிதன்... ஒருவர் கிறிஸ்தவர் என்று வைத்துக்கொள்வோம். அவர் கிருஷ்ண உணர்வினை இந்துக்களுடைய ஒரு இயக்கமாக தான் பார்ப்பார். ஆனால் உண்மையில் அது அதுவல்ல. எனவே அவர் தான் ஒரு அமெரிக்கன் என்ற தன் நிலையிலிருந்து விடுபட்டு வரவேண்டும். ஸர்வோபாதி-வினிர்முக்தம் தன் நிலையை விட்டுக் கொடுத்து வர வேண்டும். இந்த உடல் ஒரு நிலை பதவி உண்மையில் அமெரிக்கன் உடம்பிற்கும் இந்திய உடம்பிற்கும் வேறுபாடு இல்லை. உருவ அமைப்புகள் இரண்டிலும் ஒன்றுதான். ரத்தம் சதை எலும்பு இரண்டிலுமே இருக்கின்றன. உடம்பிற்குள் சென்று பார்த்தால் அதில் எந்த வேறுபாடும் இல்லை. இருந்தாலும், நாம் நிலைகள் வைத்திருக்கின்றோம், "நான் அமெரிக்கன் நீ இந்தியன், நீ கருப்பன், நான் வெள்ளை...." இதெல்லாம் வெறும் பதவிகள். உண்மையல்ல. ஆகவே ஒருவர் பதவிகளில் இருந்து விடுபடவேண்டும். பதவிகளில் இருந்து விடுபடுவதைத் தான் அது விளக்குகின்றது. ஸர்வோபாதி-வினிர்முக்தம்.

ஒருவர் பதவியை விட்டு விலக வேண்டும். உண்மையில், பதவி என்பதற்கு எந்த மதிப்பும் இல்லை. மனிதர் முக்கியம். பதவி அல்ல. ஆகவே கிருஷ்ணரைப் பார்ப்பதென்றால், முதலில் பதவிகளில் இருந்து விடுபடவேண்டும். ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம் (சை.ச. மத்திய 19.170). இங்கு மத்-பர என்று சொல்லப்பட்டுள்ளது, நாரதர் தத் பர என்று சொல்கிறார். தத் பர என்றால் கிருஷ்ண மயமாதல் மத்பர என்றால்... கிருஷ்ணர் மத் பரவாகச் சொல்கிறார். என்னிலேயே முழுவதுமாக ஆழ்ந்துவிடு. பக்தர் சொல்கிறார் கிருஷ்ணரில் முழுவதுமாக ஆழ்ந்து இருக்க வேண்டுமென்று. அதுவே கருத்து, ஆனால் குறிக்கோள் இரண்டிற்கும் ஒன்று தான். எனவே ஒருவர் கிருஷ்ணரின் ஆழ்ந்து, பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டும். ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன... அப்படிப்பட்டவன் நிர்மலமாக இருப்பான். நிர்மலம் என்றால் தூய்மையாக, எந்த பௌதிகக் கலப்படமும் இல்லாமல். நான் என் உடல் ரீதியாகவே யோசிக்கின்றேன் அது, பௌதிகம், ஏனெனில் உடல் பௌதிகம் ஆனது. "நான் அமெரிக்கன், நான் இந்தியன், நான் பிராமணன், நான் சத்ரியன், நான் இவன், நான் அவன்," என்று நினைத்துக் கொண்டிருக்கும் வரை, அத்தனையும் பதவிகள் தான். அது நிர்மலம், தூய்மையான நிலை அல்ல. தூய்மையான நிலை என்பது ஒருவன் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்வது, கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், நான் கிருஷ்ணரின் அங்கம். நாம் ஒரே குணம் கொண்டவர்கள். நாம் தனிப்பட்ட வகையில் வேறு வேறு நபர்களாக இருக்கலாம். கிருஷ்ணர் மிகப் பெரியவர். நான் மிகச் சிறியவன். ஒருவன் பௌதிக உலகத்தில் வலிமை பொருந்தியவன். மற்றவன் வலிமையற்றவன். ஆனால் இருவரும் மனிதர்கள் தான் மிருகங்கள் அல்ல. அதுபோலதான், கிருஷ்ணனும், கடவுள், குண ரீதியாக என்னை போல தான். ஆனால் அளவு ரீதியாக அவர் மிக மிக பெரியவர்.