TA/Prabhupada 1020 - இதயம் அன்புக்காக இருக்கிறது, ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு கடின மனதுடன் இருக்கிறீர்கள்
730408 - Lecture SB 01.14.44 - New York
எனவே இந்த பாண்டவர்கள், அவர்கள் கிருஷ்ணரை நேசித்தனர். எல்லோரும் இந்த நிலையில் இருக்கிறார்கள், ஆனால் அது டிகிரிகளில் உள்ள வித்தியாசம். அதே அன்பு. ஒருவர் தனது குடும்பத்தை நேசிக்கிறார், ஒருவர் தனது மனைவியை நேசிக்கிறார், ஒருவர் தனது சமுதாயத்தை அல்லது நட்பை, சமூகத்தை, நட்பை நேசிக்கிறார். அவர்கள் பிளவுபட்டு இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை நெருங்கும் போது அது அன்பின் இறுதி, இறுதி புள்ளி. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ (ஸ்ரீ.ப. 1.2.6). தர்மம் என்றால் கடமை. அது தர்மம். அல்லது பண்புகள். தர்மம் என்பது மத வெறித்தனத்தை குறிக்காது. இல்லை. அது சமஸ்கிருத பொருள் அல்ல. தர்மம் என்றால் உண்மையான பண்பு. நீர் திரவமானது என்று நான் பல முறை விளக்கினேன்; அதுதான் நீரின் நித்திய பண்பு. நீர் கடினமாகும்போது, அது நீரின் நித்திய பண்பு அல்ல. நீர் இயற்கையில் திரவமானது. பனியைப் போலவே தண்ணீர் கடினமாகும்போது கூட, அதன் போக்கு மீண்டும் திரவமாக மாறுவது. மீண்டும். மீண்டும் திரவம்.
எனவே நம் உண்மையான நிலைப்பாடு, அமைப்பு நிலைப்பாடு, கிருஷ்ணரை நேசிப்பதாகும். ஆனால் இப்போது நாம் கிருஷ்ணரை நேசிக்காத வகையில் கடினமாக இருக்கிறோம். சில சூழ்நிலைகளின் காரணமாக நீர் கடினமாவது போல, பனி. வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும்போது, தண்ணீர் கடினமாகிவிடும். இதேபோல், நாம் கிருஷ்ணரை நேசிக்கவில்லை என்றால், நம் இதயங்கள் மேலும் மேலும் மேலும் கடினமாக இருக்கும். இதயம் அன்பிற்காக இருக்கிறது, ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு கடின மனதுடன் இருக்கிறீர்கள்? வேறொரு சக மனிதனையோ அல்லது மிருகத்தையோ கொல்லும் அளவிற்கு, நீங்கள் ஏன் இவ்வளவு கடின மனதுடன் இருக்கிறீர்கள் - நாம் அதைப் பொருட்படுத்தவில்லை - நாவின் திருப்திக்காக? ஏனென்றால், நாம் கடின மனது கொண்டவர்களாக ஆகிவிட்டோம். கடின மனம் கொண்டவர்களாக. கிருஷ்ணரின் மீது அன்பில்லாத காரணத்தால், நாம் அனைவரும் கடின மனதுடன் இருக்கிறோம். எனவே உலகம் முழுவதும் மகிழ்ச்சியற்று உள்ளது. ஆனால் நீங்கள், ஹ்ர்தயேன... எனவே - ப்ரேஷ்டதமேநாத ஹ்ருதயேநாத்ம-பந்துனா என்று கூறப்படுகிறது. நம் உண்மையான நண்பரான கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால், பகவத்-கீதையில் கிருஷ்ணர் சொல்வது போல், ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம் (ப.கீ 5.29). எனவே நீங்கள் உண்மையில் கிருஷ்ணரின் பக்தராக மாறும்போது, கிருஷ்ணரின் குணங்கள் உங்களுக்குள் இருப்பதால், சிறிய அளவில் இருந்தாலும், நீங்களும் ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாமாக ஆகுகிறீர்கள். ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம். அனைத்து உயிரினங்களின் நண்பர் என்று பொருள். ஸுஹ்ருதம். வைஷ்ணவர்களின் வேலை என்ன? பொருள் ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் மீது இரக்கப்படுவதே வைஷ்ணவர்களின் வேலை. இது வைஷ்ணவம். எனவே வைஷ்ணவரின் விளக்கம்,
- வாஞ்சா-கல்பதருப்யஷ் ச
- க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச
- பதிதானாம் பாவனேப்யோ
- வைஷ்ணவேப்யோ நமோ நம:
- (ஸ்ரீ வைஷ்ணவ ப்ரணாம).
பதிதானாம் பாவனேப்யோ. பதிதா என்றால் "வீழ்ந்தது" என்று பொருள்.