TA/Prabhupada 0853 - நாம் இந்த லோகத்திற்கு வந்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல. நாம் வேறுபல லோகங்களிலும் பயண
750306 - Lecture SB 02.02.06 - New York
அதுதான் உண்மை. நாம் உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாம் இந்த லோகத்திற்கு வந்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல. நாம் வேறுபல லோகங்களிலும் பயணம் செய்திருக்கிறோம். இல்லையெனில் எப்படி கிருஷ்ணர் ப்ராமயன் என்று கூறுவார், அலைந்து திரிகிறார்; ஸர்வ பூதானி, அனைத்து உயிரினங்களும் - உயர் கிரக அமைப்பில் அல்லது இந்தக் கீழ் கிரக அமைப்பில்? அவன் எப்படி பயணிக்கிறான்? யந்த்ராரூடாணி. அந்த இயந்திரம் தான் இந்தச் சரீரம். அவருக்குச் சரீரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது உங்களுக்குச் சந்திர கிரஹத்திற்கோ அல்லது வேறு உயர்ந்த கிரஹத்திற்கோ போக வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாகப் போக முடியும். ஆனால் இந்த அற்பமான இயந்திரத்தால் அல்ல. நீங்கள் அந்த இயந்திரத்தை, வாகனத்தைக் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற முடியும். நீங்கள் விரும்பினால், அவர் உங்களுக்குக் கொடுப்பார், நீங்கள் தீவிரமாக இருந்தால், நீங்கள் சந்திர கிரகத்திற்குச் செல்ல விரும்பினால், நாம் கிருஷ்ணரைப் பிராத்திக்க வேண்டும். "எனக்குச் சந்திர கிரஹத்திற்கு செல்ல ஒரு இயந்திரம் அல்லது வாகனம் கொடுங்கள்." பிறகு நீங்கள் போகலாம். இல்லையெனில் நீங்கள் தேவை இல்லாமல் பணம் செலவழிப்பீர்கள், எங்கேயோ சென்று எந்தப் புழுதியோ கொண்டு வருவீர்கள். அதையே "என் வெற்றி" என்று கூறுவீர்கள். அவ்வளவு தான். ஆனால் நிஜமாக அங்குச் செல்ல வேண்டும் என்றால், நீங்கள் அதற்காக உங்களைத் தயார் செய்துக்கொள்ள வேண்டும். எவன் சூரியனையும், சந்திரனையும் மற்ற கோள்களையும் படைத்தவனோ, அந்த எம்பெருமானையே பிராத்திக்க வேண்டும். அவன் அங்குச் செல்வதற்கு நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறான். நாம் சூர்ய லோகத்திற்கு செல்ல முடியாது, ஏனென்றால் அங்கு வெட்பம் அதிகம். அதேப்போல் சந்திர லோகத்திற்கும் செல்ல முடியாது. அங்குக் குளிர் மிகவும் அதிகம். அதனால் இந்தச் சரீரத்தோடு எப்படி செல்ல முடியும்? இந்தச் சரீரம் என்றால் இந்த இயந்திரம்.
அதனால் நீங்கள் இன்னொரு சரீரத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அது தான் வழிமுறை. அதுதான் வழிமுறை. அதுவே பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- யாந்தி தேவ-வ்ரதா தேவான்
- பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
- பூதேஜ்ய யாந்தி பூதானி
- மத்-யாஜினோ அபி யாந்தி மாம்
எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, நீங்கள் சொர்க்க லோகங்களுக்குச் செல்ல விரும்பினால் அல்லது உயர் லோகங்களுக்கு, அவை உங்களுக்கு முன்னால் உள்ளன. சூர்ய கிரஹம் என்று ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் அங்கே செல்வதற்கு தகுதி அடையவில்லை. அது கண்டிப்பாக உள்ளது. அது மாயை இல்லை. அங்கு ஒரு வெப்பநிலை உள்ளது. சாஸ்திரத்தில் யக்-சக்சூர் ஏஷ ஸவிதா ஸகல-க்ரஹானாம் (பிரம்ம சம்ஹிதை 5.52) என்ற குறிப்புள்ளது. ஸவிதா என்றால் சூரியன். அவரே எல்லா கோள்களுக்கும் கண்களாகத் திகழ்கிறார், சூர்ய வெளிச்சம் இல்லை என்றால் நம்மால் பார்க்க முடியாது. உங்கள் கண்களைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுகிறீர்கள், ஆனால் சூரியன் இல்லாதவுடன், நீங்கள் குருடராக இருப்பீர்கள். ஆதலால், யக் சக்சூர் ஏஷ ஸவிதா ஸகல க்ரஹானாம். அனைத்து கிரகங்களிலும், சூரிய ஒளி இல்லாவிட்டால் நீங்கள் பார்க்க முடியாது. மேலும் சூரிய கிரகம் உங்களுக்கு முன்னால் உள்ளது. அனுதினமும் காலையில் சூரிய வெளிச்சத்தைக் காண்கிறோம். நீங்கள் ஏன் அங்குச் செல்லக் கூடாது? ஹூ? போங்கள். உங்களிடம் நல்ல 747 இருக்கிறதே. (சிரிப்பு) அது முடியாது. அதனால் நீங்கள் பிரார்தனை செய்ய வேண்டும். ஈஸ்வர, கிருஷ்ணர், உங்களது இதயத்தில் வீற்றிருக்கிறார், அவரிடம் முழு மனதோடு பிரார்தனை செய்தால், அவர் மிகவும் கருணை வாய்ந்தவர். ஆதலால் உங்களுக்கு ஏற்ற வாகனத்தை அவரே தருவார். ப்ராமயன் ஸர்வ-பூதானி யந்த்ராரூடானி மாயயா (பகவத் கீதை 18.61). ப்ராமயன் என்றால் அவனை ஒவ்வொரு கிரகத்திலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அலைய வைப்பது. ஸர்வ-பூதானி:எல்லா உயிர் வாழிகள். எத்தனையோ விதமான பறவைகள், எத்தனையோ விதமான மிருகங்கள், எத்தனையோ விதமான மானிட வகைகள் இருக்கின்றன. இது விசிட்ரா, வகைகள் என்று அழைக்கப்படுகிறது. கடவுளின் படைப்பு வகைகள்.
அதனால் இந்த ஜட உலகத்திற்குள் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் செல்லலாம். இல்லையேல் இந்த ஜட உலகத்திற்கு அப்பாற்பட்ட எங்கையாவது, ஜட உலகத்திற்கு அப்பாற்பட்ட. : பரஸ் தஸ்மாத் து பாவோ 'ன்யோ 'வ்யக்தோ 'வ்யக்தாத் ஸனாதன: (பகவத் கீதை 8.20). கிருஷ்ணர் உங்களுக்கு இன்னொரு தகவலைத் தருகிறார். அதாவது ஜட இயற்கை தவிர மற்றுமொரு இயற்கை இருக்கிறது அதுவே ஆன்மீக இயற்கை. நமக்கு அனுபவம் இருக்கிறது. ஆனால் நாமாகச் செல்ல முடியாது. நாம் எப்படி புவியியலில் எத்தனையோ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான கோள்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். இதேபோல், மற்றொரு இயற்கை உள்ளது. இதேபோல், உள்ளன. அதே - அதே மட்டுமல்ல; இது இந்த உலகை விட மூன்று மடங்கு அதிகம். இது இறைவனின் படைப்பின் ஒரு பகுதியே. ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்.
- அத வா பஹுனை தேன
- கிம் க்ஞாதேன தவார்ஜுன
- விஷ்டப்யாஹம் இதம் க்ருத்ஸ்னம்
- ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்.