TA/Prabhupada 0856 - கடவுள் எப்படியொரு நபராக இருக்கிறாரோ அதே போல் ஆத்மாவும் ஒரு நபர்

Revision as of 07:05, 26 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0856 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


740327 - Conversation - Bombay

பிரபுபாதர்: எனவே ஆரம்பத்தில், படைப்புக்கு முன், கடவுள் இருக்கிறார்; படைத்தப்பின், அதன் அழிவின் பொழுதும் அவர் இருப்பார். இது உன்னதமான நிலை என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சத்ரவிட: விளக்கம்: கடவுளின் நிலை எப்பொழுதுமே உன்னதமானது. ஏனெனில் படைப்புக்குத் தேவையான காரண மற்றும் விளைவு ஆற்றல்கள்... (இடைேளை)

பிரபுபாதர்: இந்தச் சட்டையை உருவாக்கும் முன், அது உருவமற்றது. அதற்குக் கையும் இல்லை, கழுத்தும் இல்லை, உடம்பும் இல்லை. அதே துணிதான். ஆனால் தையல்காரர், நம் உடம்பின் அளவிற்கு ஏற்றவாறு, கைப்பகுதி ஒன்றை இந்தச் சட்டையோடு ஒட்டினால் அதுவே கை மாதிரி உள்ளது. மார்பு பகுதி மார்பு போல உள்ளது. ஆகையால், உருவமற்றது என்றால் பௌதீக உறை. மற்றபடி ஆத்மா ஒரு நபர். நீங்கள் தையல்காரரிடம் செல்வது போல், உங்கள் உடலுக்கு ஏற்பத் தையல்காரர் ஒரு கோட்டை வெட்டுவார். அந்தக் கோட்டுக்குத் தேவையான பொருளான துணி, அது உருவமற்றது. ஆனால் அது ஒரு நபரைப் போல, ஒரு நபரை மறைப்பது போல் செய்யப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுள் ஒரு நபர் என்பது போலவே ஆன்மாவும் ஒரு நபர். உருவமற்றது என்றால் மறைத்தல். புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மறைப்பது உருவமற்றது, உயிரினம் அல்ல. அவன் மறைக்கப்பட்டு இருக்கிறான். அவன் உருவமற்றவன் அல்ல. அவன் உருவமுடையவன். மிக எளிய உதாரணம். கோட், சட்டை, உருவம்ற்றது, ஆனால் அதை அணிபவன் உருவமற்றவன் இல்லை. உருவம் உள்ளவன். அகையால் கடவுள் எப்படி உருவமற்றவராக இருக்க முடியும்? இந்தப் பௌதீக சக்தியே உருவமற்றதாகக் கருதப்படுகிறது. இதுவே பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

மயா ததம் இதம் ஸர்வம்
ஜகத் அவ்யக்த மூர்தினா
(பகவத் கீதை 9.4).

இவ்வுலகம் அவ்யக்தம், உருவமற்றது. அதுவும் கிருஷ்ணரின் சக்தி தான். எனவே தான், அவர், "நான் அருவமான வடிவத்தில் விரிவடைந்துள்ளேன்" என்று கூறுகிறார். அந்த அருவமான தன்மையும் கிருஷ்ணருடைய சக்தியே. எனவே பௌதீக உறை அருவமானது. ஆனால் ஆத்மாவும் பரமாத்மாவும் உருவமுடையது. இதுகுறித்த கேள்வி உள்ளதா, இது மிகவும் சிக்கலான கேள்வி, யாராவது? புரிந்து கொள்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? (இடைவேளை) பவ-பூதி... ஏனென்றால் நான் யோகிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஆங்கிலத்தில் கீதையை பற்றிக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன், ஆனால் அவர்களால் விளக்க முடியாது, அவர்களிடம் ஒரு மைக்கூட இல்லை...

பிரபுபாதா: இல்லை, இல்லை, அவர்களால் எப்படி விளக்க முடியும்? அவர்களிடம் ஒரு மைக்கூட இல்லை.

பிரபுபாதர்: அவர்களால் பகவத் கீதையை கூடத் தொட முடியாது. அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

பவ-பூதி: அவர்களுக்குப் புரிதல் கிடையாது.

பிரபுபாதர்: அவர்கள் பேசும் பகவத் கீதை செயற்கையாகவே இருக்கும்.

பவ-பூதி: ஆம்.

பிரபுபாதர்: அவர்களால் பேச முடியாது ஏனென்றால் அவர்களிடம் தகுந்த தகுதி இல்லை. அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, பக்தோஸி'. ஒருவன் பக்தனாக இருந்தால் தான் அவனால் பகவத் கீதையை தொட முடியும்.

பவ-பூதி: மாயாப்பூரில் கூட, நாங்கள் அந்த நேரத்தில் ஸ்ரீதர ஸ்வாமியின் ஆசிரமத்தைப் பார்க்கச் சென்றபோது, அவர் ஏதோ ஆங்கிலத்தில் பேசினார், இன்னொருவரும் ஏதோ ஆங்கிலத்தில் பேசினார். அவர்களால் உங்களைப் போலப் புரிய வைக்க முடியவில்லை, ஸ்ரீல பிரபுபாதா. நீங்கள் ஒருவர் மட்டுமே, இந்த ஞானத்தை எங்களுக்குச் சொல்லும்பொழுது, அவை உடனடியாகச் செவியிலிருந்து மனதிற்கு சென்றடைகிறது. எங்களுக்குப் புரிந்து விடுகிறது.

பிரபுபாதர்: இருக்கலாம் (சிரிக்கிறார்).

இந்திய மனிதர்: ஜெய. (ஹிந்தி).

பிரபுபாதர்: ஹரே கிருஷ்ணா. விஷாகா, நீயும் அப்படி தான் நினைக்கிறாயா?

விஷாகா: ஆம் சந்தேகமே இல்லை.

பிரபபாதர்: (சிரிக்கிறார்) ஹரே கிருஷ்ணா!