TA/661026 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:12, 29 September 2021 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆத்மா சூட்சும உடல், ஸ்தூல உடல் என்பவற்றால் சூழப்பட்டுள்ளது. ஸ்தூல உடல் செயற்படுவது நின்றவுடன்... எப்படியெனில், இரவில் ஸ்தூல உடல் படுத்திருக்கும்போது, சூட்சும உடலான மனம் செயற்படுகிறது. அதனால் கனவு காண்கிறீர்கள். சூட்சும உடல் செயற்படுகிறது. உடலை விடுக்கும் போது, சூட்சம உடல், மனம், புத்தி உங்களை அழகாக கொண்டு செல்கிறது. காற்றால் வாசனை காவிச் செல்லப்படுவது போல். காற்று சில ரோசாப்பூ செடிகளை கடந்து செல்லும்போது, ரோசாப்பூவின் நறுமணத்தை பெறுகிறது. அங்கு ரோசாப்பூ இல்லை, ஆனால் அதன் நறுமணம் இருக்கிறது. இதேபோல் உங்கள் மனநிலையின் வாசனையும் உங்கள் புரிதலின் வாசனையும் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், அதற்கேற்ற உடலை பெறுவீர்கள். எனவே இறக்கும் வேளையில் ஒருவர் கிருஷ்ண உணர்வில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளார் என்று பரிட்சை வைக்கப்படுகிறது."
661026 - சொற்பொழிவு BG 08.05 - நியூயார்க்