TA/Prabhupada 0102 - மனத்தின் வேகம்
Lecture on SB 5.5.1-8 -- Stockholm, September 8, 1973
தற்பொழுது உங்களுக்கு விமானம் இருக்கிறது. அது அருமையானது. ஆனால் உங்களால் ஜட கோளைக் கூட நெருங்க முடியாது. ஆகையால் நீங்கள் ஆன்மீக கோளுக்குச் செல்ல வேண்டுமென்றால், நீங்கள் மனத்திற்கீடான வேகம் உள்ள ஒரு விமானம் செய்யலாம். அல்லது காற்றின் வேகத்திற்கு ஈடானது. பௌதிக நூல் வல்லுநர்கள், காற்றின் வேகமும், ஒளியின் வேகமும் என்ன என்பதை அறிந்திருப்பார்கள். ஆகையால் இந்த வேகத்திற்கு மேலாக, மனத்தின் வேகம் உள்ளது. பௌதிக நூல் வல்லுநர்களுக்கு, காற்றும், ஒளியும் எத்தனை வேகமானது என்பது தெரியும். இருப்பினும் மனம்தான் மிகவும் வேகமானது. உங்களுக்கு அனுபவம் உண்டு. இப்பொழுது நீங்கள் இங்கு உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக, ஒரு நொடிக்குள், நீங்கள் அமெரிக்காவிற்கு, இந்தியாவிற்கு, உடனே போகலாம். நீங்கள் உங்கள் வீட்டிற்குச் செல்லலாம். நீங்கள் பொருள்களை பார்க்கலாம். மனத்தால், நிச்சயமாக; மன வேகத்தில். ஆகையால் ப்ரம-சம்ஹிதா கூறுகிறது அதாவது உங்களால் மனவேகத்திற்கீடாக ஒரு விமானத்தை உற்பத்தி செய்ய முடிந்தாலும், காற்றின் வேகத்தை உடையதாக - பந்தாஸ்து கோதி-ஷத-வத்ஸர-சம்ப்ரகமிய: - அந்த வேகத்துடன் நீங்கள் பல இலட்சம் வருடங்கள் போங்கள், இருப்பினும் உங்களால் கோலோக விருந்தாவன இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியாது. இன்னமும், உங்களால் கண்டுபிடிக்க முடியாது. பந்தாஸ்து கோதி-ஷத-வத்ஸர-சம்ப்ரகமியொ வாயோர் அதாபி மனசோ முனி-பன்கவானாம் (பிர.சம்.5.34). முந்திய ஆச்சார்யர்களும் மற்றவர்களும், இதை அறியாதவர்கள் என்பதல்ல, விமானம் என்றால் என்ன, வேகம் என்றால் என்ன, எப்படி ஓட்டுவது. முட்டாள்தனமாக சிந்திக்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இது ஒன்றுமில்லை, மூன்றாவது, நான்காம்-வகுப்பு கூட இல்லை, பத்தாம்-வகுப்பு. அங்கே மிகவும் அழகான விமானங்கள் இருந்தன. மன வேகத்தில் ஓடக்கூடிய விமானம் ஒன்றை நீங்கள் உற்பத்தி செய்ய இதோ இங்கே ஒரு யோசனை உள்ளது. இதோ இங்கே ஒரு யோசனை உள்ளது - அதை செய்யுங்கள். காற்று வேகத்தில் ஓடக்கூடிய ஒரு விமானத்தை நீங்கள் உற்பத்தி செய்யலாம். அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதாவது ஒளியின் வேகத்தில், நம்மால் ஒரு விமானத்தை உற்பத்தி செய்ய முடிந்தால், இருப்பினும், அது நாற்பதாயிரம் ஆண்டுகள் எடுக்கும் ஆக உச்சியில் இருக்கும் கொளை சென்றடைய. அது சாத்தியமா என்று, அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை நம்மால் காணமுடிகிறது, பூட்டுடனும் சுரையுடனும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், எவ்வாறு இந்த மடையர்கள், இது போன்ற பொருள்களை உற்பத்தி செய்ய முடியும்? அது சாத்தியமே இல்லை. அதற்கு மற்றொரு மூளை தேவைப்படுகிறது. யோகிகளால் போக முடியும், யோகிகளால் போக முடியும். எவ்வாறு என்றால் துர்வாசா முனி. அவர் வைகுண்ட-லோகத்திற்குச் சென்றார், அவர் நேரடியாகவே பகவான் விஷ்ணுவை வைகுண்ட-லோகத்தில் கண்டார் மன்னிப்பு கேட்க ஏனென்றால் விஷ்ணு சக்கரம் அவரை கொல்ல பின்தொடர்ந்து வந்தது. அவர் ஒரு வைஷ்ணவரை அவமதித்தார். அது மற்றொரு கதை. ஆக இவ்வாறாக உண்மையிலேயே மனித வாழ்க்கை அந்த நோக்கத்திற்காக வழிவகுக்கப்பட்டது, இறைவனையும் அவருடைய வலிமையையும் புரிந்துக் கொண்டு, மேலும் அவருடனான நம் பழமையான உறவுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும். அதுதான் பிரதான வேலை. ஆனால் துரதிஷ்டவசமாக, அவர்கள் தொழிற்சாலைகளில், வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள், பன்றிகளும் நாய்களும் போல் வேலை செய்ய, அவர்கள் சக்திகள் முழுவதும் பழுதடைந்துவிடுகிறது. வீணாகிப் போவதுமட்டுமின்றி, அவர்களுடைய ஒழுக்கமும், அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், ஆகையால் கடின உழைப்பிற்கு பின் அவர்கள் கண்டிப்பாக மதுபானம் அருந்துவார்கள். பிறகு மதுபானம் குடித்தபின், அவர்கள் கண்டிப்பாக மாமிசம் உண்ண வேண்டும். இந்த பிணைப்பிற்கு பிறகு, அவர்களுக்கு உடலுறவு தேவைப்படுகிறது. இவ்வாறாக, அவர்கள் இருளிலேயே இருக்கிறார்கள். மேலும் இங்கு, ரிஷபதெவின் இந்த பதங்கள், அவர் எச்சரிக்கிறார். அவர் எச்சரிக்கிறார், அவர் தன்னுடைய புத்திரர்களிடம் கூறுகிறார், ஆனால் நாம் அந்த படிப்பினை எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவர் கூறுகிறார்: நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (ஸ்ரீ.பா.5.5.1). காமான் என்றால் வாழ்க்கையின் தேவைகள். உங்களால் உங்கள் வாழ்க்கையின் தேவைகளை சுலபமாக பெறலாம். நிலத்தை உழுவதன் மூலம், உங்களுக்கு தானியங்கள் கிடைக்கும். மேலும் ஒரு பசு இருந்தால், உங்களுக்கு பால் கிடைக்கும். அவ்வளவுதான். அது போதுமானது. ஆனால் தலைவர்கள் திட்டம் வகுக்கிறார்கள், அதாவது அவர்கள் விவசாயத்தில் திருப்தி அடைந்தால், சிறிதளவு தானியமும் பாலும், பிறகு யார் தொழிற்சாலையில் வேலை செய்வார்கள்? ஆகையினால் அவர்கள் வரிவிதிக்கிறார்கள் அதனால் உங்களால் எளிமையான வாழ்க்கை கூட வாழ முடியாது. இதுதான் இருக்கும் நிலைமை. நீங்கள் விரும்பினால் கூட, இந்த நவீன தலைவர்கள் உங்களை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் உங்களை நாய்கள், பன்றிகள், கழுதைகளைப் போல் வேலை செய்ய கட்டாயப்படுத்துவார்கள்.