TA/Prabhupada 0103 - பக்தர்களின் சமூகத்திலிருந்து விலகிப் போக முயலாதீர்கள்
Lecture on CC Adi-lila 7.91-2 -- Vrndavana, March 13, 1974
நாரோத்தம தாஸ தாகுர கூறுகிறார், அதாவது "பிறப்பிற்குப் பின் பிறப்பு." ஏனென்றால் ஒரு பக்தர், கிருஷ்ணரின் திருவடிகளில் வீடுபேறு பெற்ற பின்னர் அதை விரும்புவதில்லை. இல்லை. எந்த இடமானாலும், அது முக்கியமல்ல. அவர் வெறுமனே முழுமுதற் கடவுளை துதிக்க விரும்புகிறார். அதுதான் அவருடைய வேலை. ஒரு பக்தருடைய வேலை ஜபித்தலும் ஆடிப்பாடுவதும் மேலும் பக்தி தொண்டாற்றுவது வைகுண்டத்திற்கோ அல்லது கோலோக விருந்தாவனதிற்கு செல்வதற்காகவோ அல்ல. அது கிருஷ்ணருடைய விருப்பம். "அவருக்கு பிடித்திருந்தால், அவர் என்னை அழைத்துக் கொள்வார்." அது எவ்வாறு என்றால் பக்திவினோத தாகுராவும்: இச்சா யதி தோர. ஜென்மாபி யதி மோரே இச்சா யதி தோர, பக்த-க்ரஹெதே ஜென்ம ஹஉப மோரா. ஒரு பக்தர் அதற்கு மட்டுமே வணங்குவார், அவர் கிருஷ்ணரிடம் இரந்து வேண்டமாட்டார் அதாவது "தயவுசெய்து என்னை மீண்டும் வைகுண்டத்திற்கோ அல்லது கோலோக விருந்தாவனதிற்கோ அழைத்துச் செல்லுங்கள்." இல்லை. "நான் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், அது சரியே. ஆனால் ஒன்று, என்னுடைய ஒரே வேண்டுகோள் யாதெனில்எனக்கு ஒரு கிருஷ்ண பக்தர் விட்டில் பிறப்பு அளியுங்கள். அவ்வளவுதான். அப்பொழுதுதான் நான் தங்களை மறக்காமல் இருப்பேன்." இது மட்டுமே ஒரு பக்தரின் வேண்டுகோள். ஏனென்றால், எவ்வாறு என்றால் இந்த குழந்தையைப் போல். அவள் பிறப்பிலேயே வைஷ்ணவ தந்தையும் தாயும் பெற்றிருக்கிறாள். ஆகையால் முற்பிறவியில் அவள் ஒரு வைஷ்ணவி அல்லது ஒரு வைஷ்ணவராக இருந்திருப்பாள். ஏனென்றால் இது ஓர்ரிடத்திலிருந்து வந்த வாய்ப்பு, நம் அனைத்து குழந்தைகளும், வைஷ்ணவ தந்தை தாய்க்குப் பிறந்தவர்கள், அவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். வாழ்க்கையின் முதல் தொடக்கத்திலிருந்து, அவர்கள் ஹரே கிருஷ்ணா மஹா-மந்திரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைஷ்ணவர்களுடன் இணைந்து, ஜபிக்கிறார்கள், அடிப்பாடுகிறார்கள். கட்டுபாடோ அல்லது உண்மையோ, அதனால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்த குழந்தைகள். சுசீனாம் சிரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ சன்ஜாயதே (ப.கீ.6.41). ஆகையால் அவர்கள் சாதாரண குழந்தைகள் அல்ல. அவர்கள், இந்த குழந்தைகள், எப்போதும் பக்தர்களுடன் தொடர்பு கொண்டிருக்க அதிகமாக விரும்புவதும், ஹரே கிருஷ்ணா ஜபித்துக்கொண்டே, எங்களிடம் வருகிறார்கள். ஆகையால் அவர்கள் சாதாரண குழந்தைகள் அல்ல. பக்தி-சங்கே வாச. இது ஒரு நல்ல சந்தர்ப்பம், பக்தி-சங்கே வாச.
ஆகையால் நம்முடைய கிருஷ்ண பக்தி இயக்கம் ஒரு பக்தி சங்க, பக்தர்கள் நிறைந்த இயக்கம். விட்டு விலக முயலாதீர்கள். விட்டு விலக முயலாதீர்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் அனுசரித்து கொள்ள வேண்டும். மேலும் இந்த ஜபித்தலும் ஆடிப்பாடுதலும், சங்கத்திற்குள், பக்தர்களுக்குள் ஏற்படுவது சாதகமாகவும், பெரும் மதிப்புடையதாகவும் உள்ளது.
இங்கு இது உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்து வைஷ்ணவர்களும் உறுதிசெய்தனர். தான்தர சரண-செவி-பக்த-சனெ வாச ஜனமே ஜனமே மோரேய் அபிலாஷா (ஸ்ரீலா நரொத்தம தாஸ் தாகுர). ஜனமே ஜனமே மோர என்றால் அவர் மறுபடியும் செல்ல விரும்பவில்லை. அது அவருடைய விருப்பம் அல்ல. "கிருஷ்ணர் விரும்பும் போது, கிருஷ்ணர் என்னை அனுமதிப்பார். அது வேறு பொருள். இல்லையெனில், என்னை இந்த வழியிலேயே போக விடுங்கள், பக்தர்கள் சமூகத்தின் வாழ்க்கையில் மேலும் ஜபித்தலும் ஆடிப்பாடுதலும் தான் என் வேலை." இதுதான் தேவையானது. வேறு எதுவுமில்லை. வேறு எதாவது, விரும்பத்தக்க எதாவது, அதுதான் அந்யாபிலாஷா. அந்யாபிலாஷிதா-ஷுன்யம் (பிரச. 1.1.11). இதைத்தவிர வேறு எதையும் ஒரு பக்தர் விரும்பக் கூடாது. அதாவது "ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை ஜபித்து பக்தர்கள் சமூகத்தில் என்னை வாழ விடுங்கள்." இதுதான் எங்கள் வாழ்க்கை.
மிக்க நன்றி.