TA/Prabhupada 0109 - நாம் எந்த சோம்பேறிகளையும் அனுமதிப்பதில்லை
Lecture on SB 1.7.24 -- Vrndavana, September 21, 1976
உங்கள் கடமையை நீங்கள் மிக நன்றாக செய்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தர்ம என்றால் உங்களுடைய தொழில் சம்பந்தமான வேலை. ஒருவேளை நீங்கள் ஒரு பொறியியலாளர். உங்கள் கடமையை மிக நன்றாக செய்கிறீர்கள். அல்லது ஒரு மருத்துவர், அல்லது ஒரு வணிகர், அல்லது எவரோ ஒருவர் - அனைவரும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். நீங்கள் சோம்பலாக உட்கார்ந்திருந்தால், உங்கள் பிழைப்பு நடக்காது. நீங்கள் ஒரு சிங்கமாக இருந்தால்கூட நீங்கள் வேலை செய்ய வேண்டும். ந ஹி ஸுபதஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஸ்ந்தி முகஹெ ம்ரிகா:. இது ஒரு; இந்த பௌதிக உலகம் அவ்வாறே இருக்கும். நீங்கள் சிங்கத்தைப் போல் வலிமை உடையவராக இருந்தாலும் கூட, உங்களால் உறக்கம் கொள்ள முடியாது. நீங்கள் நினைத்தால், "நான் ஒரு சிங்கம், நான் காட்டிற்கே ராஜா. என்னை உறங்கவிடுங்கள், மேலும் மிருகங்கள் வந்து என் வாயினுள் நுழைந்துவிடும்." இல்லை, அது சாத்தியமல்ல. நீங்கள் மிருகமாக இருந்தாலும் கூட, நீங்கள் ஒரு மிருகத்தை பிடிக்க வேண்டும். அதன்பின் நீங்கள் உண்ணும் தகுதி பெறுவீர்கள். இல்லையென்றால் நீங்கள் பட்டினியாக இருக்க நேரிடும். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயொ ஹி அகர்மண:. "நீங்கள் உங்கள் கடமையை செய்ய வேண்டும்." ஷ்ரீர-யாத்ராபி ச தெ ந ப்ரசித்தையாகர்மண:. நினைக்காதீர்கள், அந்த அயோக்கியர்கள் கூறுகிறார்கள் அதாவது, "கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு தப்பிச்செல்லும் வழியை கற்பிக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு வருகிறார்கள்." இல்லை, அது கிருஷ்ணரின் அறிவுரை அல்ல. நாம் எந்த சோம்பேறி மனிதனையும் அனுமதிப்பதில்லை. அவர் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க வேண்டும். அதாவது கிருஷ்ண பக்தி இயக்கத்தில். அதுதான் கிருஷ்ணரின் கட்டளை. நியதம் குரு கர்ம. அர்ஜுனர் போர்புரிய மறுத்துக் கொண்டிருந்தார். அவர் வண்முறையற்ற பண்புள்ள மனிதராக முயற்சித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் அவரை விடவில்லை. "இல்லை, இல்லை, நீ அவ்வாறு செய்யக்கூடாது. அது உன்னுடைய பலவீனமாகும்." கதஸ்த்வா கஷ்மலமிதம் விஷ்மே சமுபஸ்திதம்: " நீங்கள் அயோக்கியன் என்பதை நீங்களே நீரூபிக்கிறீர்கள். அதுவே அநார்ய-ஜஷ்தாம். இதுபோன்ற ஆலோசனை அநார்யவிற்கு, அநாகரிகமான மனிதன். அதைச் செய்யாதீர்கள்." அதுதான் கிருஷ்ணரின் அறிவுரை. ஆகையினால் நினைக்காதீர்கள் அதாவது கிருஷ்ணர் பக்தி இயக்கம், கிருஷ்ணர் உணர்வுடையவர்கள், அவர்கள் சோம்பேறிகளாகி, ஹரிதாஸ் தாகுரை போல் செய்வார்கள் என்று. அது கிருஷ்ணர் உணர்வு அல்ல. கிருஷ்ணர் உணர்வு என்றால், கிருஷ்ணரின் அறிவுரை போல், நீங்கள் இருப்பத்திநான்கு மணி நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதுதான் கிருஷ்ணர் உணர்வு. சோம்பேறிகளாகி, உண்பதும் தூங்குவதுமல்ல. இல்லை.
ஆகையால் இதுதான் தர்மஸ்ய க்லானி:. ஆனால் உங்கள் பார்வையின் கோணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பௌதிக் வாழ்க்கை நிலையில் உங்கள் நோக்கம் என்னவென்றால் எவ்வாறு புலன்களை திருப்தியடையச் செய்வதாகும். மேலும் கிருஷ்ணர் உணர்வு என்றால் நீங்கள் அதே நோக்கத்தோடு வேலை செய்ய வேண்டும், அதே வீரியத்துடன், ஆனால் நீங்கள் கிருஷ்ணரை திருப்திபடுத்த வேண்டும். அதுதான் ஆன்மீக வாழ்க்கை. சோம்பேறிதனம் உடையவராவதல்ல. வேறுபாடு என்னவென்றால், நூலாசிரியார் கிருஷ்ணதாஸரால் கூறப்பட்டது போல், ஆத்மென்டிரிய-ப்ரீதி-வாண்சா தாரெ பலியகாம் (CC Adi 4.165). காம என்றால் என்ன? காம என்றால் ஒருவர் தன் சொந்த புலன்களை திருப்தி கொள்ள விரும்புவது அதுதான் காம. கிருஷ்னேன்டிரிய-பிரீதி-இச்சா தாரெ 'ப்ரேம' நாம. மேலும் ப்ரேம என்றால் என்ன? ப்ரேம என்றால், நீங்கள் கிருஷ்ணரை திருப்திபடுத்த உங்களை ஈடுபடுத்தல். கோபியர்கள் ஏன் போற்றப்படுகிறார்கள்? ஏனென்றால் அவர்களுடைய ஒரே முயற்சி கிருஷ்ணரின் புலன்களுக்கு திருப்தி அளித்தல். ஆகையினால் சைதன்ய மஹாபிரபு பரிந்துரைத்தார், ரம்யா காசித் உபாஸனா வ்ரஜா-வதூ-வர்ஜெண யாகல்பிதா. அவர்களுக்கு வேறு வேலையில்லை. விருந்தாவன என்றால், விருந்தாவனத்தில் வசிப்பவர்கள். அவர்கள் உண்மையில் விருந்தாவனத்தில் வசிக்க விரும்பினால், அவர்களுடைய வேலை கிருஷ்ணரின் புலன்களை திருப்திபடுத்துவதே அவர்களுடைய வேலையாக இருக்க வேண்டும். அதுதான் விருந்தாவனம், "நான் விருந்தாவனத்தில் வாழ்கிறேன், மேலும் என் புலன்களை திருப்திபடுத்த முயற்சிக்கிறேன்." என்று வாழக் கூடாது. அது விருந்தாவனவாசீ அல்ல. அந்த மாதிரியான வாழ்க்கை; விருந்தாவனத்தில் நிறைய குரங்குகளும், நாய்களும், பன்றிகளும் உள்ளன. அவர்கள் விருந்தாவனத்தில் வாழ்கிறார்கள் என்று கூறுகிறீர்களா? இல்லை. விருந்தாவனத்தில் தன் புலன்களை திருப்தியடைய நினைப்பவர்கள் யாராயினும், அவர்கள் மறுபிறப்பில் ஒரு நாய், பன்றியும் குரங்குமேயாவார்கள். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆகையினால் விருந்தாவனத்தில் ஒருவர் தன் புலன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது. அது ஒரு பெரிய பாவம். வெறுமனே கிருஷ்ணரின் புலன்களை திருப்திபடுத்த முயலுங்கள்.