TA/Prabhupada 0119 - ஆன்மீக ஆன்மா என்றும் நித்தியமானது

Revision as of 12:15, 12 January 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0119 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 2.1-10 and Talk -- Los Angeles, November 25, 1968

பிரபுபாதர்: ஆம்.

ஸ்ரீமதீ: அதுதான் வயத்தென்பதா பிறகு, ஆன்மீக ஆத்மா உடலை விட்டு போகும் போது ஒருவர் முதுமையடைவாரா?

பிரபுபாதர்: இல்லை, ஆன்மீக ஆன்மா முதுமையடையாது. இந்த உடல் மாறுகிறது. அதுதான் நடைமுறை. அது விவரிக்கப்படும்,

dehino 'smin yathā dehe
kaumāraṁ yauvanaṁ jarā
tathā dehāntara-prāptir
dhīras tatra na muhyati
(BG 2.13)

ஆன்மீக ஆன்மா நித்தியமானது. உடல்தான் மாறிக்கொண்டிருக்கிறது. அது புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். உடல் மாறிக்கொண்டிருக்கிறது. அது அனைவருக்கும் புரியும். எவ்வாறு என்றால் உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் உடல் இருந்தது போல்.., எவ்வாறு என்றால் இந்த குழந்தை போல், வித்தியாசமான உடல். மேலும் இந்த குழந்தை இளம் பெண்ணாகும் போது, அது வேறுபட்ட உடலாகும். ஆனால் ஆன்மீக ஆன்மா இந்த உடம்பிலும் அந்த உடம்பிலும் அங்கே இருக்கிறது. ஆகையால் ஆன்மீக ஆன்மா மாறவில்லை என்பதற்கு இது சான்று, இந்த உடம்பு மாறுகிறது. அதுதான் சாட்சி, நான் என் குழந்தை பருவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் நானும் ஒரே மாதிரித்தான் "நான்" என்னவென்றால் நான் குழந்தை பருவத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தது, மேலும் நான் என் குழந்தை பருவத்தில் இதை செய்துக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது, நான் அதைச் செய்தேன். ஆனால் அந்த குழந்தை பருவத்து உடல் இன்றில்லை. அது கடந்துவிட்டது. ஆகையினால் இதன் இறுதி முடிவு என் உடல் மாறிவிட்டது. ஆனால் நான் அதேமாதிரித்தான் இருக்கிறேன். அப்படி தானே? இது சாதாரணமான உண்மை. ஆகையால் இந்த உடல் மாறும், இருப்பினும் நான் அப்படியே இருப்பேன். நான் மற்றொரு உடலுக்குள் நுழையலாம், அதனால் பரவாயில்லை, ஆனால் நான் அப்படியே இருப்பேன். ததா தேஹான்தரப் ப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி (BG 2.13). தற்சமய சூழ்நிலையில் கூட நான் என் உடலை மாற்றிக் கொண்டிருக்கும் போது, அதேபோல், அதன் இறுதி மாற்றம் நான் இறந்துவிட்டேன் என்று பொருள்படாது. நான் நுழைகிறேன் மற்றொரு..... அதுவும் விவரிக்கப்பட்டுள்ளது, வாஸாம்ஸி ஜீர்ணானி யதா (BG 2.22) அதாவது நான் மறுகிறேன். எவ்வாறு என்றால் நான் சன்யாசியாக இல்லாத போது, நான் மற்ற அனைத்து கனவான்களைப் போல் ஆடை அணிந்தேன். இப்பொழுது நான் என் ஆடையை மாற்றிவிட்டேன். நான் இறந்துவிட்டேன் என்று அதற்கு அர்த்தமல்ல. இல்லை. நான் என் உடலை மாற்றிவிட்டேன், அவ்வளவுதான். நான் என் ஆடையை மாற்றிவிட்டேன்.