TA/Prabhupada 0121 - இறுதியில் கிருஷ்ணர் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்
Morning Walk At Cheviot Hills Golf Course -- May 17, 1973, Los Angeles
கிருஷ்ண காந்தீ: மனித மூளையின் சிக்கலான குணத்தைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.
பிரபுபாதர்: ஆம். ஆம்.
கிருஷ்ண காந்தீ: அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். பிரபுபாதர்: ஆனால் அவர்கள் அயோக்கியர்கள். வேலைகளை செய்துக் கொண்டிருப்பது மூளை அல்ல. அங்கே வேலை செய்துக் கொண்டிருப்பது ஆன்மீக ஆத்மா. அதே பொருள்: கணினி இயந்திரம். இந்த அயோக்கியர்கள் கணினியின் இயந்திரம் வேலை செய்கிறது என்று நினைப்பார்கள். இல்லை. அந்த மனிதர் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். அவர் பொத்தானை அழுத்துகிறார், பிறகு அது வேலை செய்கிறது. மற்றபடி, இந்த இயந்திரத்தின் முக்கியத்துவம் என்ன? நீங்கள் இந்த இயந்திரத்தை ஆயிரம் வருடங்களுக்கு வைத்திருங்கள், அது வேலை செய்யாது. மற்றொரு மனிதர் வந்து, பொத்தானை அழுத்தினால், பிறகு அது வேலை செய்யும். ஆகையால் யார் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்? இயந்திரம் வேலை செய்கிறதா அல்லது மனிதர் வேலை செய்துக் கொண்டிருக்கிறாரா? மேலும் அந்த மனிதரும் மற்றொரு இயந்திரம். அது பரமாத்மா, பகவான் முன்னிலையில் இருப்பதால் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால், இறுதியில், பகவான் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். ஒரு இறந்த மனிதரால் வேலை செய்ய முடியாது. ஒரு மனிதர் எத்தனை காலத்திற்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்? பரமாத்மா அங்கிருக்கும்வரை, ஆத்மா இருக்கும். ஆத்மா அங்கிருந்தால்கூட, பரமாத்மா அவருக்கு அறிவாற்றல் கொடுக்கவில்லை என்றால், அவரால் வேலை செய்ய முடியாது. மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞானம பபோஹனம் ச (BG 15.15). கடவுள் எனக்கு அறிவாற்றல் கொடுக்கிறார், "நீ இந்த பொத்தானை போடு." பிறகு நான் அந்த பொத்தானை போடுகிறேன். ஆகையால் இறுதியில் கிருஷ்ணர் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு, பயிற்சி பெறாதவர் வந்து இதில் வேலை செய்ய முடியாது ஏனென்றால் அங்கே அறிவாற்றல் இல்லை. மேலும் பயிற்சி பெற்ற ஒரு குறிப்பிட்ட மனிதர், அவர் வேலை செய்வார். ஆகையால் இந்த காரியங்கள் இவ்வாறு தொடர்கிறது. இறுதியில் கிருஷ்ணரிடம் செல்வார்கள். என்ன ஆராய்ச்சி நீங்கள் செய்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் பேசிக்கொண்டிருப்பதும், அதுவும் கிருஷ்ணரே செய்கிறார். கிருஷ்ணர் உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்..., இந்த வசதிகளுக்காக நீங்கள் கிருஷ்ணரிடம் வேண்டினீர்கள். கிருஷ்ணர் உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக ஒரு ஆராய்ச்சி வெற்றிகரமாவதை காண்பீர்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதில் மிகவும் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கிருஷ்ணர் பார்த்து, "சரி செய்." எவ்வாறு என்றால் யஷோதா மா கிருஷ்ணரை கட்டிப்போட முயன்றார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. ஆனால் கிருஷ்ணர் சம்மதித்தவுடன், அது முடிந்தது. அதேபோல், இந்த எதிர்பாராத என்றால் கிருஷ்ணர் உங்களுக்கு உதவிபுரிகிறார்: "சரி, நீங்கள் மிக கடினமாக உழைத்துவிட்டீர்கள், அதன் பலனை அனுபவியுங்கள்." அனைத்தும் கிருஷ்ணரே. மத்த: ஸர்வம் ப்ரவர்ததே (BG 10.8). இது விவரிக்கப்பட்டுள்ளது. மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞானம பபோஹனம் ச (BG 15.15). அனைத்தும் கிருஷ்ணரிடமிருந்து வருகிறது.
ஸ்வரூப தாமோதர: அவர்கள் கூறுகிறார்கள், "இந்த பரிசோதனையை செய்ய கிருஷ்ணர் சரியான வழிமுறையை எனக்கு கொடுக்கவில்லை."
பிரபுபாதர்: ஆம், அவர் உங்களுக்கு கொடுத்தார். இல்லையென்றால் எவ்வாறு அதை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் செய்வது எதுவென்றாலும், அது கிருஷ்ணரின் கருணையாலே. மேலும் நீங்கள் இன்னும் ஆதரவாக இருந்தால், பிறகு உங்களுக்கு இன்னும் அதிக வசதிகள் கொடுப்பார். கிருஷ்ணர் உங்களுக்கு வசதிகள் கொடுப்பார், உங்களை ஆதரிப்பார், நீங்கள் விரும்பிய அளவிற்கு, அதற்கு மேல் அல்ல. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ..., எவ்வளவுக்கு சரிசம விகிதப்படி நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைகிறிர்களோ அதே அறிவாற்றலும் பெறுவீர்கள். நீங்கள் முழுமையாக சரணடைந்தால், பிறகு முழு அறிவாற்றலும் பெறுவீர்கள். பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவபஜாம்யஹம் (BG 4.11).