TA/Prabhupada 0125 - இந்த சமூகம் மிகவும் மாசுப்படுத்தப்பட்டுவிட்டது

Revision as of 09:27, 4 February 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0125 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.5.23 -- Vrndavana, August 4, 1974

சூத்திரர்களைவிட குறைந்த அந்தஸ்துடையவர்கள் அனைவரும் பண்சமஸ், ஐந்தாவது தரத்தை சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். முதல் தரம், பிராமண, இரண்டாம் தரம், க்ஷத்ரிய, மூன்றாம் தரம், வைஸிய, நான்காம் தரம், சூத்திர, மற்ற அனைவரும் - ஐந்தாம் தரம். அவர்கள் சண்டாலஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். சண்டாலஸ், துப்புரவாளர், காலணி தைப்பவர், இன்னும் தாழ்ந்த தரம். இன்னமும், இந்தியாவில் இந்த ஐந்தாம் தரம் மக்கள் மட்டும், அவர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள், பன்றி, சிலசமயம் மாடு. ஐந்தாம் தரம் இப்போது அது ஒரு செயலாகிவிட்டது. மேலும் அவன் ஒரு முதல் தர மனிதன். ஆகையால் சும்மா பாருங்கள் ஐந்தாம் தரம் மனிதனுடைய வியாபாரமாக இருந்தது, அது அரசியல்வாதியின் வியாபாரமாகிவிட்டது. நீங்கள் பாருங்கள். ஆகையால் நீங்கள் ஐந்தாம் தரம் மனிதரால் ஆட்சி செய்யப்பட்டால் நீங்கள் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. அங்கு எவ்வாறு சமூக அமைதி ஏற்படும்? அது சாத்தியமல்ல. ஆனால் இந்த ஐந்தாம் தரம் மனிதன் கூட, கிருஷ்ண பக்தி இயக்கத்தால் புனிதப்படுத்தப்படலாம். ஆகையினால் இந்த இயக்கத்திற்கு அபாரத் தேவை இருக்கிறது. ஏனென்றால் தற்சமயம் அங்கே முதல் ரக மனிதர்கள் இல்லை, முதல் தர மனிதர்கள் இல்லை, இரண்டாம் தர மனிதர்கள் இல்லை. ஒருவேளை மூன்றாம் தரம், நான்காம் தரம், ஐந்தாம் தரம், ஆறாம் தரம், அவ்வாறு. ஆனால் அவர்கள் புனிதப்படுத்தப்படலாம். அது, ஒரே செயல்முறை இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தான். எவரும் புனிதப்படுத்தப்படலாம். மாம் ஹி பார்த்த வ்யபாஷ்ரித்ய யே'பி ஸ்யு: பாபயோனய: (BG 9.32). அவர்கள் பாபயோனி என்று அழைக்கப்படுகிறார்கள், தாழ்ந்த-தரத்தில், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். பாபயோனி. கிருஷ்ணர் கூறுகிறார், யே'பி ஸ்யு: பாபயோனய: எம்மாதிரியான பாபயோனியாக இருந்தாலும் பரவாயில்லை. மாம் ஹி பார்த்த வ்யபாஷ்ரித்ய "அவர் என்னிடம் சரண் அடைந்தால், பிறகு..." அந்த சரணம் ஏற்றுக் கொள்ளப்படலாம் ஏனென்றால் கிருஷ்ணர் பிரதிநிதி ஆதரவு தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆகையால் அங்கே பற்றாக்குறை இல்லை. வெறுமனே அவருடைய பாதுகாப்பை ஒருவர் பெற வேண்டும். அவ்வளவுதான். எவ்வாறு என்றால் சைதன்ய மஹாபிரபுவின் குறிக்கொள் இந்த பிரதிநிதிகளை உருவாக்குவதாகும். "எங்கும் செல்லுங்கள்." ஆமார ஆஞாய குரு ஹணா தார' ஐதெஷ (CC Madhya 7.128). "செல்லுங்கள்." அவர் வழக்கமாக நித்யானந்த பிரபு, ஹரிதாஸ தாகுரவை ஆதரவுத் தேட அனுப்புவார். "தயவுசெய்து ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள். தயவுசெய்து ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள். தயவுசெய்து கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்." தெருவிலும் ஒரே கூட்டமாக இருந்தது. நித்யானந்த பிரபுவும், ஹரிதாஸ தாகுராவும் பார்த்தார்கள், மேலும் அவர்கள் கேட்டார்கள், "என்ன கூட்டம் இது?" "இல்லை, அங்கே இரண்டு சகோதரர்கள், ஜகாயும் மாதாயும், மிகவும் தொல்லையானவர்கள். அவர்கள் குடிகாரர்கள், பெண் பொறுக்கிகள் அத்துடன் மாமிசம் உண்பவர்கள், மேலும் அவர்கள் எப்போதும் தொல்லை உருவாக்குவார்கள்." நித்யானந்த பிரபு உடனடியாக முடிவெடுத்தார், "இவர்களை ஏன் பாவத்திலிருந்து முதலில் விடுவிக்கக் கூடாது?"

பிறகு என் பகவானின் பெயர் மேன்மைப்படுத்தப்படும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பெயர் மேன்மைப் பெறும். இதுதான் சீடர்களின் தொழில், ஆன்மீக குருவை எவ்வாறு மேன்மைப்படுத்துவது, பரம்பரா. நான் என் ஆன்மீக குருவை மேன்மைப்படுத்தினேன், நீங்கள் உங்கள் ஆன்மீக குருவை மேன்மைப்படுத்துங்கள். நாம் வெறுமனே இந்த மேன்மைப்படுத்தலை செய்தால், பிறகு கிருஷ்ணர் மேன்மைப்படுத்தப்படுவார். அதுவே நித்யானந்தரின் தீர்மானம், அதாவது "ஏன் இந்த நிலைதவறிய ஆத்மாக்களை முதலில் விடுவிக்கக் கூடாது?" ஏனென்றால் சைதன்ய மஹாபிரபு அவதாரம் எடுத்தது நிலைதவறிய ஆத்மாக்களை விடுவிக்க. இந்த யுகத்தில் கட்டுண்ட ஆத்மாக்களுக்கு பஞ்சமே இல்லை. பதித-பாவன-ஹெது தவ அவதார, மொஸம பதித ப்ரபு நா பாஇபி ஆர. நரொத்தம தாஸ தாகுர தன்னை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கமலத் திருவடியில் அமர்த்திக் கொள்கிறார், அதாவது "என் பகவானே, தங்களுடைய அவதாரம் இந்த நிலைதவறிய ஆத்மாக்களை மீட்பதற்காக. ஆனால் நிலைதவறிய ஆத்மாக்களில் நான் ஆக தாழ்ந்தவன். ஆகையால் என் மீட்புதான் முதலாவது. கருணயுடன் என்னை விடுவித்து காப்பாற்றுங்கள்." மொஸம பதித ப்ரபு நா பாஇபி ஆர. "தாங்கள், தங்களுடைய தீர்மானம் நிலைதவறிய ஆத்மாக்களை விடுவிப்பது. ஆகையால் நான் முதல் ரக நிலைதவறிய ஆத்மா. தயவுசெய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்." ஆகையால் கலியுகம், மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டுண்ட ஆத்மாக்கள், அனைவரும் மாமிசம் உண்பவர்கள், குடிகாரர்கள், அனைவரும் ஐந்தாம்-தரம், ஆறாம்-தரம் மனிதர்கள். அவர்கள் தற்பெருமை மிக்கவர்கள், ஆனால் உண்மையில் அவர்கள் ஐந்தாம்-, ஆறாம்-, மேலும் பத்தாம்-தர மனிதர்கள், பண்புள்ள மனிதர்கள் கூட இல்லை. ஆகையினால் என் குரு மஹாராஜ் வழக்கமாக கூறுவார் அதாவது "எந்த பண்புள்ள மனிதரும் இங்கு வாழ முடியாது. இந்த சமூகம் மிகவும் மாசுப்படுத்தப்பட்டுவிட்டது." ஆனால் அங்கே சைதன்ய மஹாபிரபுவிற்கு சேவை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சமூகம் மிகவும் நிலைதவறியுள்ளது, ஆகையினால் அங்கே சைதன்ய மஹாபிரபுவிற்கு சேவை செய்ய நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சைதன்ய மஹாபிரபுவின் அவதாரம் இந்த கட்டுண்ட ஆத்மாக்களை மீட்பதற்காக. ஆகையால் உங்களுக்கு அந்த சேவை செய்யும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை திருப்திபடுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது, ஏனென்றால் அவர் கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிக்க விரும்புகிறார். கிருஷ்ணரும் அதை விரும்பினார். யதா யதா ஹி க்ளாநிர் பவதி பாரத, தர்மஸ்ய க்ளாநிர் பவதி பாரத. கிருஷ்ணர் வருவார்... இது பகவானின் வேலை அப்படியே போய்க் கொண்டிருக்கும். அவர் இந்த அயோக்கியர்களை மீட்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார், இந்த ஜட உலகில் சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணர் எப்பொழுதும் ஆர்வமுடன் இருக்கிறார். அவர் தானே வருகிறார். அவர் பக்தராக தோன்றுகிறார். அவர் வருகிறார், அவருடைய உண்மையான சேவகனை, உண்மையான மகனை அனுப்புகிறார். ஆகையால் இது கிருஷ்ணரின் அக்கறை, நிலைதவறிய ஆத்மாக்களை மீட்பதற்கு. ஆகையினால் இவை தான் சந்தர்ப்பம். யோகினீஸ், யோகின:, அவர்கள் உலகமெங்கும் பிரயாணம் செய்கிறார்கள். மழை பருவங்களில் அவர்கள் ஓய்வெடுப்பார்கள். அதற்காக மற்ற பருவங்களில் உண்பதும், உறங்குவதும் மட்டும் என்பதல்ல. இல்லை. ஏனென்றால் மழை காலங்களில், பிரயானம் செய்வது அசெளகரியமாக இருக்கும், ஆகையினால் நான்கு மாதங்கள் மட்டும். ஆகையால் இந்த நான்கு மாதத்தில், அவர்கள் எங்கு தங்கினாலும், வெறுமனே யாராவது அவர்களுக்கு சேவை செய்யும் போது, ஒரு சிறுவன் சேவகனாக, அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அங்கு போதனைக்கே கேள்வியில்லை. வெறுமனே சேவை செய்யும் வாய்ப்பு கொடுத்தாலே, நிலைதவறிய ஆத்மாக்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் தகுதியுடையவராக இருக்க வேண்டும், சேவையை ஒன்றும் இல்லாமல் ஏற்கக் கூடாது. பிறகு நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் உண்மையில் ஆன்மீக நிலையில் இருந்தால், பிறகு உங்களுக்குச் சேவை செய்ய மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர் விடுவிக்கப்படுவார். தத்துவத்தைப் புரிந்துக் கொள்ளும் கேள்விக்கு இடமில்லை. ஒரு பக்தர் தூய்மையானவராக இருக்க வேண்டும். அந்த முறை என்னவென்றால், ஒரு பக்தரை ஒருவர் பார்த்தவுடனே, அவர் கீழே சாய்ந்து அவர் பாதங்களை தொடுவார். இதுதான் முறை. ஏனென்றால் பாதங்களை தொடுவதன் மூலம், மஹத்-பாத-ரஜொ-அபிஷேகம் ஒருவர் உண்மையில் ஆன்மீக வாழ்விற்கு உயர்ந்து மேலும் அவரும், எடுத்து, மக்கள் அவர் கமலப் பாதங்களை தொடும் வாய்ப்பு கிடைத்தால், பிற்கு அவர் பக்தர் ஆவார். இதுதான் செயல்முறை.