TA/Prabhupada 0135 - வேதத்தின் வருடத்தை உங்களால் கணக்கிட முடியாது

Revision as of 08:36, 18 March 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0135 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Mor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Morning Walk -- October 5, 1975, Mauritius

தமிழன்: ஸ்வாமிஜி பைபலில் ஆதாம் பற்றி, ஆதாம் பிராமணரா? அது இந்திய மெய்யியலில் இருந்து நகல் செய்யப்பட்டு அங்கு வேறு பெயரில் எழுதப்பட்டதா?

பிரபுபாதர்: வரலாற்றுக் கோணத்தில் பார்த்தால் அது நகல் செய்யப்பட்டுள்ளது, ஏனென்றால் வேதங்கள் ப்ரமாவால் பல இலட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது, மேலும் பைபில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆகையால் நாம் மூலமானவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து சமய முறைகளும், அவை வேதத்தின் பல பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆகையினால் அவை முழுமை பெறவில்லை. பைபலின் தோற்றம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. வேதத்தின் தோற்றம் உங்களால் கணக்கிட முடியாது, பல இலட்சக் கணக்கான வருடங்கள்.