TA/Prabhupada 0139 - இது தான் ஆன்மீக உறவு

Revision as of 14:47, 18 April 2016 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0139 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 3.25.38 -- Bombay, December 7, 1974

ஆகையால் நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், ஜட பொருள்களைப் போன்ற எந்த அழிவும் இருக்காது. நீங்கள் அவரை யாதேனுமொன்றாக நேசிக்கலாம் உங்களுடைய எஜமானராக..., இங்கு எஜமானர், நீங்கள் சேவை செய்யும் காலம்வரை, எஜமானர் மனநிறைவு கொள்வார். மேலும் சேவகர் நீங்கள் ஊதியம் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் ஆன்மீக உலகில் இதுபோன்று எதுவுமில்லை. சில சூழ்நிலைகளால் என்னால் சேவை செய்ய முடியவில்லை என்றாலும், எஜமானர் மனநிறைவோடு இருப்பார். மேலும் சேவகனும் கூட - எஜமான் ஊதியம் கொடுக்கவில்லை என்றாலும், - அவரும் மகிழ்ச்சியோடு இருப்பார். அதை ஒருமைப்பாடு என்றழைக்கிறோம், பூரணமானவர். அதுதான்..., இந்த உதாரணம் இங்குள்ளது. இந்த ஸ்தாபனத்தில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஊதியம் எதுவும் கொடுப்பதில்லை, ஆனால் அவர்கள் எனக்கு அனைத்தையும் செய்வார்கள். இது தான் ஆன்மீக உறவு. அந்த பண்டிதர் ஜவர்ஹலால் நேரு, அவர் லண்டனில் இருந்த பொழுது, அவர் தந்தை மோதிலால் நேரு, அவருக்கு சேவகன் வைத்துக் கொள்ள அவரிடம் முன்னூறு ரூபாய் கொடுத்தார். பிறகு ஒருமுறை அவர் லண்டன் சென்றடைந்த போது, அந்த சேவகன் அங்கு இல்லை என்பதை கண்டு கொண்டார். அந்த பண்டிதர் கேட்டார் , "எங்கே உங்களுடைய சேவகன்?" அவர் கூறினார், "சேவகனால் என்ன பயன்? எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. நானே சொந்தமாக செய்துக் கொள்கிறேன்." "இல்லை, இல்லை. நான் விரும்புவது, ஒரு ஆங்கிலேயன் உன் சேவகனாக இருக்க வேண்டும்." ஆகையால் அவர் அதற்கு விலை கொடுக்க வேண்டும். இது ஒரு உதாரணம். நான் ஊதியம் கொடுக்காமலேயே என்னிடம் நூறு மேலும் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள். இது தான் ஆன்மீக உறவு. இது தான் ஆன்மீக உறவு. அவர்கள் சேவை செய்வது ஊதியத்திற்கல்ல. என்னிடம் என்ன இருக்கிறது? நான் ஒரு ஏழை இந்தியன். என்னால் என்ன கொடுக்க முடியும்? ஆனால் அவர்கள் சேவை அன்பினாலானது, ஆன்மீக அன்பு. மேலும் நானும் அவர்களுக்கு சம்பளமேதுமின்றி கற்பிக்கிறேன். இது தான் ஆன்மீகம். பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய (ஐஸொ. இன்) அனைத்தும் நிறைந்துள்ளது. ஆகையால் நீங்கள் கிருஷ்ணரை உங்கள் மகனாக, உங்கள் நண்பனாக, உங்கள் காதலராக ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஏமாற்றம் அடையமாட்டீர்கள். ஆகையால் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள முயலுங்கள். இந்த மாயையான சேவகன், அல்லது மகன், அல்லது தந்தை, அல்லது காதலர் போன்ற தோற்றத்தை கைவிடுங்கள். நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.