TA/Prabhupada 0162 - பகவத் கீதையின் கருத்துக்களை சுமந்து செல்லுங்கள்
Press Interview -- October 16, 1976, Chandigarh
ஆத்மாவின் உண்மையான கடமையை அறிவதற்கு பாரத நாட்டில் பல வேத இலக்கியங்கள் உள்ளன. மேலும் இந்த மனித உடலில் இருந்துகொண்டு நாம் ஆன்மீக கடைமைகளை ஒரு பொருட்டாக கருதாவிடில் , அது தற்கொலைக்குச் சமமாகும். இதுவே பாரத தேசத்தில் பிறந்த பல மகான்களின் கருத்தாகும். ஆச்சாரியர்கள் தொன்றுதொட்டு இருக்கின்றனர். முற்காலத்தில் வியாச தேவரைப் போல பல ஆச்சாரியர்கள் இருந்தனர். தேவலா போன்ற பல ஆச்சரியகள் முற்காலத்தில் இருந்தனர். மேலும் கடந்த 1500 வருடங்களுக்குள் பலப் பல ஆசிரியர்கள் இருந்தனர். ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மாதவாச்சாரியார், ஸ்ரீ விஷ்ணு சுவாமி போன்றவர்கள் இருந்தனர். மேலும் 500 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றினார். இவர்களும் ஆன்மிகத்தைப் பற்றிய பற்பல இலக்கியங்களை நமக்கு கொடுத்து இருக்கின்றனர். ஆனால், இந்தக் காலத்தில் இந்த ஆன்மீக அறிவானது புறக்கணிக்கப்படுகிறது. எனவே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு உலகத்திற்கு சொல்லும் செய்தி என்னவென்றால் .. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆன்மீக குருவாக வேண்டும். நீங்கள் எவ்வாறு ஆன்மீக குரு ஆவது ? என்ற கேள்வி எழும். ஆன்மீக குரு ஆவது, எளிமையான காரியம் அல்ல. அதற்கு ஒருவர் நன்கு கற்றறிந்த அறிஞராக இருக்க வேண்டும். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் உணர்ந்தவராக இருக்கவேண்டும். ஆனால் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நமக்கு ஒரு எளிய வழிமுறையை கூறியிருக்கிறார். அதாவது பகவத் கீதையில் கூறியுள்ள கருத்துக்களை நீங்கள் உண்மையாக கடைப்பிடித்து, அவற்றை மக்களுக்கு போதித்தால் நீங்களும் ஆன்மீக குருவாகலாம். பெங்காலி மொழியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. yāre dekha, tāre kaha 'kṛṣṇa'-upadeśa (CC Madhya 7.128). ஆன்மீக குரு ஆவது மிகவும் கடினமான காரியம். ஆனால் நீங்கள் பகவத்கீதையின் கருத்துக்களை உணர்ந்துகொண்டு.... நீங்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவற்றை போதித்தால், நீங்களும் குரு தான். நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முதன்மையான குறிக்கோள் இதுவே. நாங்கள் பகவத் கீதையை , எந்த ஒரு தவறான விளக்கமும் இல்லாமல் உண்மையுருவில் தருகிறோம்