TA/680508c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 04:34, 2 February 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வு இயக்கம். இஃது ஒன்றும் புதிய இயக்கம் அன்று. இந்த இயக்கம் குறைந்தபட்சம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது. பகவான் சைதன்யர் பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த இயக்கத்தை தொடங்கினார். இந்தியாவில் எல்லா இடங்களிலும் இந்த இயக்கம் இருக்கிறது, ஆனால் நிச்சயமாக உங்கள் நாட்டில் இது புதியதுதான். ஆனால் நமது கோரிக்கை என்னவென்றால், தயவு செய்து இந்த இயக்கத்தை சிறிது தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிறுத்தி விடும்படி நாம் கேட்கவில்லை. நீங்கள் செய்து கொள்ளுங்கள். வங்காளத்தில் நல்ல பழமொழியொன்று உள்ளது, அதாவது ஒரு பெண் வீட்டு வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தாலும், அழகாக உடுத்திக் கொள்வதிலும் கவனமாக இருக்கிறாள். இது பெண்களின் இயல்பாகும். அவர்கள் வெளியே செல்லும் போது நன்றாக உடுத்திக் கொள்வார்கள். அதேபோல், நீங்கள் எல்லா விதமான தொழில்நுட்பங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அது ஒன்றும் தடைசெய்யப்பட்டவில்லை. ஆனால் அதே சமயத்தில், இந்த தொழில்நுட்பத்தை, ஆன்ம விஞ்ஞானத்தையும் புரிந்து கொள்ள முயலுங்கள்."
680508 - சொற்பொழிவு to Technology Students MIT - பாஸ்டன்