TA/680616c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:07, 12 February 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு தங்க கூண்டில், ஒரு பறவை இருக்கிறது. பறவைக்கு உணவு ஏதும் அளிக்காமல் வெறுமனே கூண்டை நன்றாக கழுவி வைத்தால், ஓ, எப்போதும் (பறவையை போன்று செய்கிறார்) 'ச்சீ ச்சீ ச்சீ ச்சீ ச்சீ'. ஏன்? உண்மையான பறவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெறுமனே வெளிப்புற போர்வை. இதேபோல் நான் ஒரு ஆத்மா. அதை மறந்து விட்டேன். அஹம் ப்ரஹ்மாஸ்மி: 'நான் பிரம்மன்'. நான் இந்த உடல் அல்ல, இந்த மனதும் அல்ல. மக்கள் உடலையும் மனதையும் மெருகூட்ட முயல்கிறார்கள். முதலில் அவர்கள் உடலை மெருகூட்ட முயல்வார்கள். இது பௌதிக நாகரீகமாகும். சிறந்த ஆடைகள், நல்ல உணவு, நல்ல இருப்பிடம், நல்ல கார் என சிறந்த புலன் இன்பங்கள்- எல்லாம் சிறப்பானவை. ஆனால் அது இந்த உடலுக்கானது. இந்த அருமையான ஏற்பாடுகளில் விரக்தி ஏற்படும்போது, மனதிடம் செல்வான்: கவிதை, மனக்கற்பனை, எல்.எஸ்.டி, கஞ்சா, மது என பல. இவை அனைத்தும் மன ரீதியானவை. உண்மையில், இன்பம், உடலிலும் இல்லை, மனதிலும் இல்லை. உண்மையான இன்பம் ஆத்மாவில் உள்ளது."
680616 - சொற்பொழிவு SB 07.06.03 - மாண்ட்ரீல்