TA/680720b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:57, 28 February 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இயற்கையின் செயல் அற்புதமாக நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய..‌. போல்... அது... ஆத்மாவின் இருப்பு காரணமாக பல விடயங்கள் அற்புதமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், இயற்கையின் இந்த எல்லா செயல்களும் கடவுளின், பரமாத்மாவின் இருப்பினால் மிக அற்புதமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதுவே பௌதிக இயற்கையை பற்றிய புரிதல். மேலும் இறைவன், உயிர்வாழி, பௌதிக இயற்கை, மற்றும் காலம். காலம் நித்தியமானது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றெல்லாம் கிடையாது. இது என்னுடைய கணிப்பு... அது சார்புடையது. இதுவே பேராசிரியர் ஐன்ஸ்டைனின் நவீன விஞ்ஞான கருத்து. உங்களது நேரமும் எனது நேரமும்... அவரும் கூறியுள்ளார், உயர் கிரகங்களில் காலம் வித்தியாசமானது. உயர் கிரகங்களில் காலம்- நமது ஆறுமாதங்கள் சேர்ந்து அவர்களின் ஒரு பகலை ஆக்குகின்றன. நமது பல யுகங்கள் சேர்ந்து பிரம்மனின் பன்னிரண்டு மணித்தியாலங்களை ஆக்குவது போல. எனவே காலம் வெவ்வேறு விடயங்களுக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால் காலம் நித்தியமானது. உண்மையில், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அல்லது கட்டுப்பாடு ஏதுமில்லை. இதுவே காலத்தை பற்றிய புரிதல்."
680720 - சொற்பொழிவு BG Excerpt - மாண்ட்ரீல்