TA/680930 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:35, 26 April 2022 by Thusyanthan (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எமது நிகழ்ச்சி கோவிந்தனை, ஆதி புருஷனை அன்புடனும் பக்தியுடனும் வழிபடுவதாகும். கோவிந்தம் ஆதி-புருஷம்.‌ இதுவே கிருஷ்ண உணர்வு. நாம் மக்களுக்கு கிருஷ்ணரை நேசிப்பதற்கு கற்றுக்கொடுக்கிறோம், அவ்வளவுதான். எமது நிகழ்ச்சி அன்பை சரியான இடத்தில் வைப்பதாகும். அதுவே எமது நிகழ்ச்சி.‌ எல்லோருக்கும் நேசிக்க விருப்பம், ஆனால் அன்பு தவறான இடத்தில் வைக்கப்படுவதால் ஏமாற்றமடைகின்றனர்.‌ மக்கள் அதனை புரிந்து கொள்வதில்லை.‌ அவர்களுக்கு 'எல்லாவற்றிற்கும் முதலில், உனது உடலை நேசி'. பின்னர் சிறிது விரிவுபடுத்தி, 'உனது தாய் தந்தையரை நேசி'. பின்னர் 'உனது சகோதர சகோதரிகளை நேசி'. பின்னர் 'உனது சமூகத்தை, உனது நாட்டை, ஒட்டுமொத்த மனித குலத்தை நேசி' என்று கற்பிக்கப்படுகிறது. ஆனால், பெயரளவேயான இவ்வெல்லா விரிவுபடுத்தப்பட்ட அன்பும், கிருஷ்ணரை நேசிக்கும் தளத்திற்கு வரும்வரை திருப்தியை கொடுக்காது. அப்போதுதான் திருப்தியடைவீர்கள்."
680930 - சொற்பொழிவு - சியாட்டில்