TA/680930b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:57, 27 April 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணரும் கோபியரும், அவர்களது உறவு மிகவும் நெருக்கமானதாகவும் மிகவும் கலப்படமற்றதாகவும் இருந்தது, கிருஷ்ணரே ஏற்றுக்கொண்டார், ‌'எனது அன்புக்குரிய கோபியரே, தங்கள் அன்பின் விவகாரங்களுக்கு பதிலாக திருப்பிக் கொடுப்பதற்குரிய எதுவும் எனது சக்திக்கு உட்பட்டதாக இல்லை'. கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற்கடவுள். அவரே திவாலாகிப் போனார், அதாவது 'எனது அன்புக்குரிய கோபியரே, என்னை நேசிப்பதன் மூலம் நீங்கள் உருவாக்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு என்னால் இயலவில்லை.' எனவே அதுவே அன்பின் உன்னத பூரணத்துவம். ரம்யா காசித் உபாஸனா வ்ரஜ-வதூ (சைதன்ய-மஷ்ஜுஸா). நான் பகவான் சைதன்யரின் நோக்கத்தைதான் விவரிக்கிறேன். அவர் நமக்கு உபதேசம் அளிக்கிறார், அவரது நோக்கம், கிருஷ்ணரும் அவரது விருந்தாவன நிலமும்தான் ஒரே ஒரு அன்புக்குரிய பொருள். மேலும் அவரை நேசிக்கும் செயல்முறையின் தெளிவான உதாரணம் கோபியரே. யாராலும் அதை அடைய முடியாது. பக்தர்களின் வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன, மேலும் கோபியர்கள் உன்னத தளத்தில் இருக்கின்றனர். மேலும் கோபியர்களுள் ராதாராணி உன்னதமானவர். அதனால் ராதா ராணியின் அன்பினை எவராலும் மிஞ்ச முடியாது."
680930 - சொற்பொழிவு - சியாட்டில்