TA/681007 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:40, 27 April 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, அதாவது மற்றொரு ஆன்மீக வானம் இருக்கிறது, அங்கு சூரியஒளி தேவையில்லை, ந யத்ர பாஸயதே ஸூர்யோ. ஸூர்ய என்றால் சூரியன், மேலும் பாஸயதே என்றால் சூரியஒளியை விநியோகம் செய்வது. ஆகவே அங்கு சூரியஒளி தேவையில்லை. ந யத்ர பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ. ஷஷாங்கோ என்றால் சந்திரன். அங்கு சந்திரஒளியும் தேவையில்லை. ந ஷஷாங்கோ ந பாவக꞉. அங்கு மின்சாரஒளியும் தேவையில்லை. அப்படியென்றால் ஒளி நிறைந்த இராஜ்ஜியம். இங்கு, இந்த பௌதிக உலகம் இருள் நிறைந்த இராஜ்ஜியம். இது அனைவருக்கும் தெரியும். இது உண்மையில் இருள். சூரியன் பூமியின் மற்றொரு பக்கம் போனதும் உடனடியாக இங்கு இருள் நிறைந்துவிடும். அது இயற்கையாக இருள் நிறைந்தது என்று அர்த்தம். வெறுமனே சூரியஒளியாலும், சந்திரஒளியாலும், மேலும் மின்சாரஒளியாலும் அதை நாம் வெளிச்சமாக வைத்திருக்கிறோம். உண்மையில் அது இருளானது. மேலும் இருள் என்றால் அறியாமையாகும்."
681007 - சொற்பொழிவு - சியாட்டில்