TA/681021c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:10, 6 May 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குடும்ப வாழ்க்கையில், நான் என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இருந்தபோது, சில நேரங்களில் நான் என் ஆன்மீக குருவைப் பற்றி கனவு காண்பேன், அதாவது அவர் என்னை அழைக்கிறார், மேலும் நான் அவரை பின்தொடர்கின்றேன். என் கனவு களைந்ததும், நான் நினைத்துப் பார்த்தேன் - நான் கொஞ்சம் திகிலடைந்தேன் - 'ஒ, குரு மாஹாராஜ் என்னை சன்னியாசியாக கூறுகிறார். நான் எவ்வாறு சன்னியாசம் ஏற்பது?' அந்த நேரத்தில், என் குடும்பத்தைவிட்டு ஒரு நாடோடியாக போவதில் எனக்கு திருப்தி இல்லை. அந்த நேரத்தில் அது ஒரு பயங்கரமான உணர்வு. சில நேரங்களில் நான் நினைத்தேன், 'இல்லை, என்னால் சன்னியாசம் ஏற்க முடியாது'. ஆனால் மறுபடியும் நான் அதே கனவை கண்டேன். எனவே இவ்விதமாக நான் அதிர்ஷ்டசாலியானேன். என் குரு மாஹாராஜ் என்னை இந்த ஜட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றினார். நான் எதையும் இழக்கவில்லை. அவர் மிகவும் கருணையுள்ளவராக இருந்தார். நான் வெற்றி அடைந்தென். நான் மூன்று பிள்ளைகளை விட்டு வந்தேன், எனக்கு இப்போது முந்நூறு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆகவே நான் தோல்வியடையவில்லை. இதுதான் பௌதிக கருத்து. நாம் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்வதால் தோல்வி அடைவோம் என்று நினைக்கிறோம். யாரும் தோல்வி அடைவதில்லை."
681021 - சொற்பொழிவு Festival Disappearance Day, Bhaktiprajnana Kesava Maharaja - சியாட்டில்