TA/690215 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:09, 16 July 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பத்ரம்ʼ புஷ்பம்ʼ பலம்ʼ தோயம்ʼ
யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம்ʼ பக்த்ய்-உபஹ்ருʼதம்
அஷ்நாமி ப்ரயதாத்மன꞉
(ப.கீ. 9.26)

'யராவது எனக்கு மலர், பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவற்றை பாசத்துடன் அளித்தால், நான் அதை ஏற்றுக் கொண்டு மேலும் சாப்பிடுவேன்', இப்போது அவர் எவ்வாறு சாப்பிடுகிறார், அதை நீங்கள் தற்சமயம் பார்க்க இயலாது - ஆனால் அவர் சாப்பிடுகிறார். அதை நாம் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்கிறோம், சடங்குகளின் முறைப்படி, மேலும் நீங்கள் உணரலாம் உணவின் சுவை உடனடியாக மாறிவிடுகிறது. அதுதான் நடைமுறை. அவர் சாப்பிடுகிறார், ஆனால் அவர் நிறைவடைந்துவிட்டதால், அவர் நம்மைப் போல் சாப்பிடுவதில்லை. எவ்வாறு என்றால் நான் உங்களுக்கு ஒரு தட்டில் உணவு வகைகளை கொடுத்தால், நீங்கள் முடித்துவிடுவீர்கள். ஆனால் பகவானுக்கு பசி இல்லை, ஆனால் சாப்பிடுகிறார். அவர் சாப்பிட்டுவிட்டு மேலும் முன்பு இருந்ததைப் போல் உணவை வைத்துவிடுகிறார்."

690215 - சொற்பொழிவு BG 06.06-12 - Los Angeless