TA/690409 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:41, 3 August 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த சிறுவன், நாத்திகர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் - அவர் தந்தை பெரிய நாத்திகவாதி - ஆனால் அவர் நாரதர் என்னும் உயர்ந்த முனிவரால் ஆசி அருளப்பட்டார், அவர் உயர்ந்த பக்தரானார். இப்போது அவர் கிருஷ்ண பக்தியை பரப்பும் வாய்ப்பை எடுத்துக் கொண்டார், எங்கே? அவருடைய பள்ளியில். அவருடைய பள்ளியில். அவர் ஐந்து வயது சிறுவன், மேலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் தன்னுடைய வகுப்பு தோழர்களுக்கு கிருஷ்ண பக்தியை பரப்புவார். அதுதான் அவருடைய வேலை. பலமுறை பிரகலாத மகாராஜாவின் தந்தை ஆசிரியர்களை அழைத்து, 'ஆக, என் பிள்ளைக்கு என்ன கல்வி கற்பிக்கிறீர்கள்? அவன் ஏன் ஹரே கிருஷ்ணா ஜெபிக்கிறான்?' (சிரிப்பொலி) 'நீ ஏன் என் மகனை கெடுக்கிறாய்?' (சிரிப்பொலி) நீங்கள் பார்தீர்களா? எனவே நான் இந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் ஹரே கிருஷ்ணா கற்பித்து, கெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். (சிரிப்பொலி)."
690409 - சொற்பொழிவு SB 07.06.01 - நியூயார்க்