TA/690430 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:15, 13 August 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், அதாவது பெளதிக வாழ்க்கையின் கருத்துப்படி, அல்லது உடல் ரீதியான வாழ்க்கையின் கருத்துப்படி, நம் புலன்கள் மிகவும் முக்கியமானது. அதுதான் தற்போதைய தருணத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய தருணத்தில் அல்ல; இந்த பெளதிக உலகம் தோன்றிய காலத்திலிருந்து. அதுதான் அந்த நோய், அதாவது 'நான் இந்த உடல்'. ஷ்ரீமத்-பாகவத் ஸய்ஸ் தத் யஸ்யாத்ம-புத்தி꞉ குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ꞉ கலத்ராதிஷு பௌம இஜ்ய-தி꞉ (ஸ்ரீ.பா. 10.84.13), அதாவது உடல் ரீதியாக புரிந்துக் கொள்ளும் கருத்துடைய எவரும், அதாவது 'நான் இந்த உடல்'. ஆத்ம-புத்தி꞉ குணபே த்ரி-தாது. ஆத்ம-புத்தி꞉ என்றால் இந்த தோலும் எலும்பும் உள்ள இந்த பையில் இருப்பது தானே, என்னும் கருத்துடையவர். இது ஒரு பை. இந்த உடல் தோல், எலும்பு, இரத்தம், சிறுநீர், மலம், மேலும் பல நல்ல பொருள்கள் நிறைந்தது. நீங்கள் பார்த்தீர்களா? ஆனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அதாவது 'நான் எலும்பு, தோல், மலம், இரத்தம், மேலும் சிறுநீர் நிறைந்த ஒரு பை. அதுதான் நம்முடைய அழகு. நமக்கு அனைத்தும் அதுதான்'."
690430 - சொற்பொழிவு Northeastern University - பாஸ்டன்