TA/690507 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:51, 17 August 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒவ்வொரு யுகத்திலும், அறிவுசார்ந்த வர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் இருப்பார்கள். எனவே இந்த அறிவுசார்ந்த வர்க்கத்தினர் ப்ராஹ்மண என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் அடுத்த வர்க்கம், நிர்வாகிகள். நாட்டை நிர்வகிக்க அரசியலில் ஈடுபாடுடையவர்கள், அவர்கள் க்ஷத்ரியஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். க்ஷத்ரியர் என்பதின் உண்மையான பொருள் யாதெனில் 'ஒருவர் மற்றவர்களால் காயப்படுத்தப்படாமல் அவரை பாதுகாப்பவர்'. அதுதான் க்ஷத்ரியா என்று அழைக்கப்படுகிறது. அப்படியென்றால், அதுதான் நிர்வாகிக்கும் அரசாங்கத்தின் வேலை. ஆக ப்ராஹ்மண, க்ஷத்ரியா, பிறகு வைஷ்யஸ். வைஷ்யர் என்றால் உற்பத்தி வர்க்கம், மக்கள் பயன்படுத்தும் பொருள்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். வணிகர் வர்க்கம், தொழிலதிபர், அவர் வைஷ்யர் அவர்கள் வைஷ்யஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் கடைசி வர்க்கம், நான்காவது வர்க்கம், அவர்கள் சூத்ராஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். சூத்ராஸ் என்றால் அவர்கள் அறிவுசார்ந்தவர்களும் அல்ல, நிர்வாகிகளும் அல்ல, வணிகர்கள் அல்லது தொழிலதிபர்களும் அல்ல, ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு வேலை செய்வார்கள். அவ்வளவுதான். எனவே அது சொல்லப்படுகிறது அதாவது கலௌ ஷூத்ர ஸம்பவ. நவீன யுகத்தில், பல்கலைக்கழகத்தில் சூத்ராவாவதற்கு, மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது."
690507 - சொற்பொழிவு at Harvard University Divinity School Cambridge - பாஸ்டன்