TA/690509b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கொலம்பஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:04, 18 August 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த மகாபாரத வரலாறு குறிப்பாய் இந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்காக ஆனது: பெண்கள், தொழிலாளர் வர்க்கம் மேலும் இந்த த்விஜபந்து வர்க்கம், அல்லது ப்ராஹ்மணஸ் மேலும் க்ஷத்ரியஸ் எனறு அழைக்கப்படுபவர்கள். இருப்பினும் நீங்கள் மகாபாரதம் படித்தால், இந்த யுகத்தின் சிறந்த அறிஞர்களுக்கும் கடினமாக இருப்பதை காண்பீர்கள். பகவத் கீதையைப் போல். பகவத் கீதை மகாபாரதத்தினுள் அமைக்கப்பட்டிருக்கிறது, மேலும் அது முதலில் குறைந்த புத்திசாலி வர்க்கத்திற்காக அமைக்கப்பட்டது. எனவே அந்த நாட்களில் எத்தகைய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள் இருந்தார்கள் என்று புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உண்மையில் அது அவ்வாறு இருந்தது. பகவத் கீதை மிகவும் அழகான தத்துவ ஆன்மீக ஆய்வுக்கட்டுரை, அர்ஜுனனுக்கு போர்க்களதில் கற்பிக்கப்பட்டது. ஆக போர்க்களதில் எவ்வளவு நேரம் அவரால் செலவளிக்க முடியும்? மேலும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர் போர் செய்யப் போகிறார், அவர் சிந்தித்தார், "ஓ, நான் ஏன் சண்டை போட வேண்டும்?" எனவே கிருஷ்ணரால் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டது - எனவே நீங்கள் கற்பனை செய்யலாம், அதிகபட்சம் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் அவர் உரையாடினார் - மேலும் அவர் பகவத் கீதையை முழுமையாக புரிந்துக் கொண்டார். எனவே அர்ஜுன் எந்த வர்க்கத்தைகச் சேர்ந்த மனிதன்? அதே பகவத் கீதையை இந்த யுகத்தின் பெரிய அறிஞர்களால் கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை. மேலும் அர்ஜுனன் அரைமணி நேரத்திற்குள் புரிந்துக் கொண்டார்."
690509 - சொற்பொழிவு Temple Opening - கொலம்பஸ்