TA/690611b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:35, 7 September 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு பக்தர், "இதை செய்யாதே" என்று மருத்துவர் கேட்பது போல அவரை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. அவர் தானாகவே அதை செய்கிறார். ஏன்? பரம்ʼ த்ருʼஷ்ட்வா நிவர்ததே: அவர் சிறந்ததொன்றை பார்த்தோ அல்லது சுவைத்தோ இருக்கிறார், அதனால் இந்த அருவருப்பான சுவையை அவர் இனி விரும்பமாட்டார். அதுவே பக்தி꞉ பரேஷானு... அதன் அர்த்தம், நாம் அருவருப்பான விஷயங்களில் வெறுப்படையும் போது, பின்னர் நாம் கிருஷ்ண உணர்வில் முன்னேறுகிறோம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். சோதனை உங்கள் கையில். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை, "நான் கிருஷ்ண உணர்வில் முன்னேறுகிறேன் என்று நினைக்கிறீர்களா?" ஆனால் உங்களால் புரிந்து கொள்ள முடியும். சரியாக இதே வழியில்: நீங்கள் பசியுடன் இருந்தால், சாப்பிடுகிறீர்கள் என்றால்,‌‌ சாப்பிடுவதன் மூலம் எப்படியென்று உங்களுக்குத் தெரியும். பசி எவ்வளவு திருப்தியடைந்துள்ளது, எவ்வளவு பலமாக உணர்கிறீர்கள், எவ்வளவு சந்தோஷமாக உணர்கிறீர்கள். யாரிடமும் நீங்கள் கேட்கத் தேவையில்லை. அதேபோல, யாராவது தனது கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டால், அவர் எல்லா பௌதிக இன்பங்களிலும் ஆர்வமற்றிருப்பார் என்பதுதான் சோதனை."
690611 - சொற்பொழிவு SB 01.05.12-13 - New Vrindaban, USA