TA/700502 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:52, 25 October 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதிக உலகில் இரண்டு சக்திகள் வேலை செய்கின்றன: ஆன்மீக சக்தி மேலும் பௌதிக சக்தி. பௌதிக சக்தி என்றால் இந்த எட்டு மாதிரியான பௌதிக மூலப்பொருள்கள். பூமிர் ஆபோ (அ)னலோ வாயு꞉: (ப.கீ.7.4), நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், அறிவு, மேலும் தற்பெருமை. இவை அனைத்தும் பௌதிகம். மேலும் அதேபோல், மென்மையான, மென்மையான, மென்மையான, மென்மையான, மேலும் தெளிவாய், தெளிவாய், தெளிவாய். எவ்வாறு என்றால் நீர் நிலத்தைவிட மென்மையாக உள்ளது, பிறகு நெருப்பு நீரைவிட மென்மையாக உள்ளது, பிறகு காற்று நெருப்பைவிட மென்மையாக உள்ளது, பிறகு வானம், அல்லது ஈதர், காற்றைவிட மென்மையாக உள்ளது. அதேபோல், அறிவு ஈதரைவிட மென்மையாக உள்ளது, அல்லது மனம் ஈதரைவிட மென்மையாக உள்ளது. அந்த மனம்... உங்களுக்கு தெரியும், நான் பலமுறை உதாரணம் அளித்திருக்கிறேன்: மனத்தின் வேகம். ஒரு நொடிக்குள் பல ஆயிரம் மைல்கள் நீங்கள் செல்லலாம். எனவே அது அதிக மென்மையாக ஆகும் போது, மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதேபோல், இறுதியாக, நீங்கள் ஆன்மீக பகுதிக்கு வரும்போது, மென்மையாக, எதிலிருந்து அனைத்தும் வெளிப்படுகிறதோ, ஓ, அது மிகவும் சக்திவாய்ந்தது. அந்த ஆன்மீக சக்தி."
700502 - சொற்பொழிவு ISO 01 - லாஸ் ஏஞ்சல்ஸ்