TA/700507 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:28, 13 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணா, அவர் வ்ருʼந்தாவன, கோலோக வ்ருʼந்தாவனாவில், அவருடன் இணைந்தவர்களுடன் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், நிலைக்கு, வடிவம், தோற்றம், செயல்களுக்கு ஏற்றபடி அவர் எங்கும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார். ஆகையினால் இங்கு சொல்லப்படுகிறது அதாவது பரம புருஷர் நடக்கிறார் மேலும் நடப்பதில்லை. அவருடைய இருப்பிடத்தைவிட்டு போவதில்லை. அவர் முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லா இடங்களிலும் நடந்துக் கொண்டிருக்கிறார். எவ்வாறு என்றால் நாம் உணவு வகைகளை வழங்குவது போல். கிருஷ்ணர் ஏற்றுக் கொள்வதில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் பக்தியுடன் ஏதாவது வழங்கினால் கிருஷ்ணர் கைகளை உடனடியாக விரித்து ஏற்றுக் கொள்கிறார். தத் அஹம்ʼ பக்த்ய்-உபஹ்ருʼதம் அஷ்நாமி (ப.கீ. 9.26). கிருஷ்ணர் கூறுகிறார், 'யாரேனும் எனக்கு வழங்கினால்..., எனக்கு ஏதோ ஒன்று நம்பிக்கையுடன் மேலும் அன்புடன் வழங்கினால், நான் உட்கொள்வேன்'. மக்கள் கேட்கலாம், 'ஓ, கிருஷ்ணர் வெகு தூரத்தில் இருக்கின்றார், கோலோக வ்ருʼந்தாவனாவில். அவர் எவ்வாறு சாப்பிடுவார்? அவர் எவ்வாறு எடுப்பார்?' ஓ, அதுதான் பகவான். ஆம், அவரால் எடுக்க முடியும். ஆகையினால் அது சொல்லப்படுகிறது, "அவர் நடக்கிறார்; அவர் நடப்பதில்லை."
700507 - சொற்பொழிவு ISO 05 - லாஸ் ஏஞ்சல்ஸ்