TA/700614 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:53, 22 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கின்றோம்: நீங்கள் மூன்றாம் தரம், நான்காம் தரம், ஐந்தாம் தரம், பத்தாம் தரமாக இருந்தாலும் கருத்தில் கொள்ளாதே. எதுவாக இருந்தாலும், நீங்கள் வாருங்கள் முதல் தரமாகலாம். நாங்கள் எல்லோரையும் அழைக்கிறோம். எங்களுக்கு வேறுபாடு இல்லை. கிருஷ்ணரிடம் அத்தகைய வேறுபாடு இல்லை. அதாவது கிருஷ்ணர் கூறுகிறார்:
மாம்ʼ ஹி பார்த வ்யபாஷ்ரித்ய
யே (அ)பி ஸ்யு꞉ பாப-யோனய꞉
(ப.கீ. 9.32)

'என் அன்பு அர்ஜுனா, யாராவது கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்டால், அவர் அருவருக்கத்தக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பாதகமில்லை, அஸ்த்ரியோ வைஷ்யாஸ் ததாஷூத்ராஸ், அல்லது மனித சமூகத்தில், தாழ்ந்த அறிவுள்ள ஆண்கள் ஷூத்ராவைப் போல் அல்லது பெண்களைப் போல். கருத்தில் கொள்ளாதே. அவன் அல்லது அவள் எதுவாக இருந்தாலும், அவன் அல்லது அவள் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்டால், 'தே (அ)பி யாந்தி பராம்ʼ கதிம் அவர்கள் உயர்த்தப்படுவார்கள், அவர்கள் இறைவனை சென்று அடைவார்கள், பரமபதம் அடைவார்கள்.' எனவே நமக்கு கட்டுப்பாடு இல்லை. 'நீங்கள் வராதீர்கள்' என்று நாம் சொல்லமாட்டோம். நாம் எல்லோரையும் அழைப்போம், 'பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள், ஹரே கிருஷ்ணா ஜெபியுங்கள்'. அதுதான் எங்கள் செயல் திட்டம்."

700614 - சொற்பொழிவு Srila Baladeva Vidyabhusana Appearance - லாஸ் ஏஞ்சல்ஸ்