TA/700630 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:17, 26 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இதுவரை வேத அறிவைப் பொறுத்தவரை, வாழ்க்கை ஒரு விளையாட்டல்ல; அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும். நாம் அதை கற்றுக்கொண்டோம், இந்த அடிப்படை அறிவு பகவத் கீதையில் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசின் (ப.கீ. 2.20): 'என் அன்பு அர்ஜுனா, ஜீவாத்மாக்கள் பிறப்பதில்லை, அவர்கள் இறப்பதுமில்லை'. பிறப்பும் இறப்பும் இந்த உடலுக்கு தான், மேலும் உன்னுடைய பயணம் தொடர்ச்சியாக... எவ்வாறு என்றால் உன்னுடைய ஆடையை மாற்றுவது போல், அதேபோல் நீ உன் உடலை மாற்றுகிறாய்; உனக்கு மற்றொறு உடல் கிடைக்கிறது. ஆகையினால் நாம் ஆசார்யர்களின், அல்லது அதிகாரிகளின் அறிவுறைகளை பின்பற்றினால், பிறகு இறப்பிற்குப் பின் நிச்சயம் பிறப்பு உள்ளது. மேலும் மறுபிறப்பிற்கு எவ்வாறு ஏற்பாடு செய்வது? ஏனென்றால் இந்த வாழ்க்கை மறுபிறப்பிற்கு தயார் செய்வதற்கு தான். இங்கு ஒரு பெங்காலி பழமொழி, அது சொல்கிறது, பஜன் கோரோ ஸாதன் கோரோ முர்தே ஜான்லே ஹய. அதன் பொருளுரை என்னவென்றால், உங்களுடைய அறிவின் முன்னேற்றத்தை, பௌதிகம் அல்லது ஆன்மீகம் பற்றி நீங்கள் மிகவும் பெருமை கொள்ளலாம், ஆனால் அனைத்தும் உங்கள் மரண நேரத்தில் சொதனை செய்யப்படும்."
700630 - சொற்பொழிவு SB 02.01.01 - லாஸ் ஏஞ்சல்ஸ்