TA/701223 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சூரத் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:59, 19 December 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் அறியாமையில் இருக்கும் போது... எல்லோரும் பாவச் செயல் அல்லது குற்ற நடவடிக்கைகளை அறியாமையால் செய்கிறார்கள். அறியாமை. ஒரு குழந்தை அறியாமையால் நெருப்பை தொடுவது போல். நெருப்பு மன்னிக்காது. அவன் ஒரு குழந்தை என்பதால், அவனுக்கு தெரியாது, ஆகையினால் நெருப்பு மன்னிக்குமா? அவன் கையை சுடாதா? இல்லை. அது குழந்தையாக இருந்தாலும், நெருப்பு செயல் புரியும். அது சுட்டுவிடும். அதேபோல், சட்டத்தில் அறியாமைக்கு மன்னிப்பு இல்லை. நீங்கள் சில பாவச் செயல் செய்து மேலும் சட்ட நீதிமன்றத்திற்குச் சென்று, மன்றாடினால், "ஐயா, எனக்கு இந்த சட்டம் தெரியாது," அதற்கு மன்னிப்பு இல்லை. உங்களுக்கு சட்டம் தெரியாவிட்டாலும், நீங்கள் இந்த பாவச் செயலை செய்துவிட்டீர்கள்; அதற்காக நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்று பொருள்படாது. ஆகையினால் அனைத்து பவச் செயல்களும் அறியாமையால் அல்லது இரண்டும் கலந்து, தீவிர உணர்ச்சி மேலும் அறியாமையால் செய்யப்படுகிறது. ஆகையினால் ஒருவர் தன்னை நன்மையின் தரத்திற்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். அவன் நல்லவனாக, மிகவும் நல்லவனாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் மிகவும் நல்லவனாக வேண்டுமென்றால், பிறகு நீங்கள் இந்த ஒழுங்குமுறை கொள்கைகளை பின்பற்ற வேண்டும்: சட்டவிரோத உடலுறவு கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது, மது அருந்தக் கூடாது, சூதாடக் கூடாது. இதுதான் பாவம் நிறைந்த வாழ்க்கையின் நான்கு தூண்கள். நீங்கள் இந்த நான்கு கொள்கையின் பாவம் நிறைந்த வாழ்க்கையில் ஈடுபட்டால், நீங்கள் ஒரு நல்ல மனிதனாக முடியாது."
701223 - சொற்பொழிவு SB 06.01.41-42 - சூரத்