TA/710117 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:58, 26 December 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தர்ம-அர்த-காம-மோக்ஷ (ஸ்ரீ.பா. 4.8.41, சி.சி. அதி 1.90): இவை தான் ஜீவாத்மாக்களை முக்தி பெற உயர்ந்த தளத்திற்கு செல்வதற்கான கொள்கைகள். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள், பொதுவாக... அவர்கள் மத சடங்குகளை அதிகமாக பணம், அர்த, அடைய நிகழ்த்தினார்கள். நிச்சயமாக, நம் பராமரிப்பிற்கு நமக்கு பணம் தேவை; அது முக்கியமானது. ஆனால் வெறுமனே பணம் பெறுவதற்கு மட்டும் நாம் மத சடங்குகளை நடத்தினால், அது தவறாக வழிநடத்தப்பட்டது. பொதுவாக மக்கள் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் அதிகமாக பணம் கிடைக்கும் என்பதால் தர்மம் செய்கிறார்கள். அவர்கள் தர்மஷாலா நிறுவுகிறார்கள், அப்பொழுதுதான் அவர்களுக்கு நிறைய வீடுகள் கிடைக்கும் என்று. அதுதான் அவர்களின் நோக்கம். அல்லது அவர்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு உயர்த்தப்படலாம் என்று. ஏனென்றால் அவர்களுக்கு அவருடைய உண்மையான நோக்கம் என்னவென்று தெரியாது. உண்மையான நோக்கம் என்னவென்றால் பரம பதம் அடைதல், இறைவனை சென்று அடைதல்."
710117 - சொற்பொழிவு SB 06.02.12-14 - அலகாபாத்