TA/710129c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:18, 31 December 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் அது சொல்லப்பட்டுள்ள்து, ப்ரத்யக்ஷாவகமம்ʼ தர்ம்யம்ʼ (ப.கீ. 9.2). தன்னையறியும் விஞ்ஞானத்தின் மற்ற முறைகளில், அதாவது கர்ம, ஜ்ஞான, யோக, இவற்றில் நீங்கள் உண்மையில் முன்னேற்றம் அடைகிறீர்களா என்று உங்களால் சோதனை செய்ய இயலாது. ஆனால் பக்தி யோகா முழு நிறைவானது, அதாவது நீங்கள் நடைமுறையில் முன்னேற்றம் அடைகிறீர்களா என்று தானே ஆய்வு செய்துக் கொள்ளலாம். சரியாக அதே உதாரணம், நான் மீண்டும், மீண்டும் பலமுறை சொல்லியிருக்கிறேன், அதாவாது உங்களுக்கு பசித்தால், உங்களுக்கு உணவு அளிக்கப்பட்டால், உங்களுக்கு தானே புரியும் உங்கள் பசி எவ்வாறு தனிந்து மேலும் எவ்வாறு வலிமையை உணர்கிறீர்கள் என்று. நீங்கள் வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை. அதேபோல், நீங்கள் ஹரே கிருஷ்ணா மந்திரம் உச்சாடனம் செய்கிறீர்கள், சோதனை என்னவென்றால் நீங்கள் உண்மையில் முன்னேற்றம் அடைகிறீர்களா என்பது, நீங்கள் இந்த பௌதிக இயற்கையின் இரண்டு தாழ்ந்த தரம், அதாவது ரஜோ குணம் மேலும் தமோகுணம் இவற்றால் ஈர்க்கப்படுகிறீர்களா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்."
710129 - சொற்பொழிவு SB 06.02.45 - அலகாபாத்