TA/710201b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:13, 12 January 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பெண்களே மற்றும் அன்பர்களே, நமக்கு கிருஷ்ணரை க்ருʼபா-ஸிந்து, கருணைக் கடல் என்று தெரியும்: ஹே க்ருʼஷ்ண கருணா-ஸிந்தோ. தீன-பந்தோ, மேலும் அவர், அடிபணிந்த ஆன்மீக ஆன்மாக்களின் நண்பர் ஆவார். தீன-பந்தோ. தீன—இந்த முக்கியமான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது ஏனென்றால் நாம் இந்த பௌதிக உலகில் வாழ்கிறோம். நாம் மிகவும் தற்பெருமை மிக்கவர்களாக இருக்கின்றோம்—ஸ்வல்ப-ஜலா மாத்ரேன ஸபரி போர-போரயதே. எவ்வாறு என்றால், ஒரு சிறு மீன், ஏரியில் ஒரு மூலையில் முன்பின் ஊசலாடுகிறது, அதேபோல், நம் நிலை என்னவென்று நமக்கு தெரியாது. இந்த பௌதிக உலகில் நம் நிலை மிகவும் முக்கியமற்றது. இந்த பௌதிக உலகம் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, ஏர், பகவத்-கீதா: ஏகாம்ʼஷேன ஸ்திதோ ஜகத் (ப.கீ. 10.42). முழு படைப்பிலும் இந்த பௌதிக உலகம் ஒரு முக்கியமற்ற பகுதியாகும். நமக்கு தகவல் கிடைக்க; அங்கே எண்ணற்ற பிரபஞ்சங்கள் இருக்கின்றன—யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி (பி.ஸ். 5.40). ஜகத்-அண்ட-கோடி. ஜகத்-அண்ட என்றால் இந்த பிரபஞ்சம். எனவே அங்கே... கோடி என்றால் எண்ணற்ற."
710201 - சொற்பொழிவு at Pedagogical Institute - அலகாபாத்