TA/710317 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 07:39, 6 February 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முதலில், நாம் ஒவ்வொரு அடியிலும் துன்புறுத்துவது நமக்குத் தெரிவதில்லை. ஏன் இந்த மின்விசிறியை உபயோகிக்கிறீர்கள்? ஏனெனில், நீங்கள் துன்புறுகிறீர்கள். ஏனெனில், அதீத வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் துன்புறுகிறீர்கள். அதுபோலவே, குளிர் காலத்தில் காற்றானது இன்னுமொரு துன்பமாக இருக்கும். காற்று உள்ளே வராதவாறு கதவுகளை இறுக்கமாக சார்த்தியுள்ளோம். தற்போது காற்று துன்பத்தை தணிக்கிறது, மற்றொரு பருவத்தில் அதே காற்று துன்பத்தை கொடுக்கிறது. எனவே, காற்றுதான் துன்பத்திற்கும் சரி பெயரளவேயான இன்பத்திற்கும் சரி காரணமாக இருக்கிறது. உண்மையில் நாம் வெறுமனே துன்பப்படுகிறோம், அது நமக்குத் தெரிவதில்லை. ஆனால், இந்த உலகம் து꞉காலயம் அஷாஷ்வதம் (BG 8.15) என்ற தகவலை பகவான் கிருஷ்ணரிடமிருந்து பெறுகிறோம். இது துன்பத்தின் இருப்பிடம். எந்த இன்பத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதுவே நமது முட்டாள்தனம்."
710317 - சொற்பொழிவு TLC - மும்பாய்