TA/710326 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:55, 8 February 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இரட்டைத் தன்மை உள்ள இந்த உலகில், பத்ராபத்ர, "இது நல்லது, இது மோசமானது. இது நன்றாக இருக்கிறது, இது நன்றாக இல்லை," அவர்கள் வெறுமனே மனதில் யூகம் செய்கிறார்கள், ஏனென்றால் இந்த உலகில் எதுவும் நன்றாக இல்லை. அனைத்தும் மோசமாக இருக்கிறது, ஏனென்றால் அது நித்தியமானதல்ல. ஆகையினால் ஷங்கராசார்ய கூறுகிறார், ஜகன் மித்யா, ப்ரஹ்ம ஸத்ய. அது உண்மையே. இவை, எதுவும், இந்த உலகின் பல வகைகள்: தற்காலிகமானது, அதுதான் சரியான வார்த்தை. அது மித்யா அல்ல; அது தற்காலிகமான உண்மை. வைஷ்ணவ தத்துவவாதி கூறுகிறான் அதாவது இந்த உலகம் பொய்யானதல்ல, ஆனால் தற்காலிகமானது, அநித்ய. அநித்ய ஸம்ʼஸாரே மோஹோ ஜனமியா.

ஷ்ரீல பக்திவினோத டாகுர கூறுகிறார், ஜட-வித்யா ஸப மாயார வைபவ: "ஜட விஞ்ஞானத்தின் முன்னேற்றம் மாயாவின் மாயையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது." நாம் ஏற்கனவே மாயாவின் மாயையில் இருக்கின்றோம், மேலும் நீங்கள் மாயையை அதிகரித்துக் கொண்டே போனால், பிறகு நாம் மேலும், மேலும், சிக்கிக் கொண்டவர்களாகிவிடுவோம். அதுதான் இயற்கையானது.

710326 - சொற்பொழிவு Pandal at Cross Maidan - மும்பாய்