TA/710806 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:16, 17 April 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் தற்காலிகமான வெளிப்பாட்டிற்கு வணக்கம் செலுத்துகிறோம் தேஜோ-வாரி-ம்ருʼதாம்ʼ வினிமய꞉ (ஸ்ரீ.பா. 1.1.1). தேஜோ என்றால் நெருப்பு, வாரி என்றால் தண்ணீர், மேலும் ம்ருʼதாம் என்றால் பூமி. எனவே நீங்கள் மண்ணை எடுத்து, நீருடன் கலந்து, மேலும் நெருப்பினுள் வைத்துவிடுங்கள். பிறகு அதை அரைத்துவிடுங்கள், ஆக அது செங்களுடன் குழியம்மியாகிவிடும், மேலும் நீங்கள் மிக உயர்ந்த வானளாவிய கட்டிடம் தயாரித்து வணக்கத்தை அளிப்பீர்கள். ஆம். 'ஓ, எத்தகைய பெரிய இல்லம் என்னுடைய'. த்ரி-ஸர்கோ (அ)ம்ருʼஷா. ஆனால் அங்கே மற்றொறு இடம் உள்ளது: தாம்னா ஸ்வேன நிரஸ்த-குஹகம். நாம் இங்கு செங்களுக்கும், கற்களுக்கும், இரும்புக்கும் வணக்கம் செலுத்துகிறோம். முக்கியமாக உங்கள் நாட்டில் இருப்பது போல்— அனைத்து மேற்கத்திய நாட்டிலும்— அங்கே பல சிலைகள் உள்ளன. அதே பொருள், தேஜோ-வாரி-ம்ருʼதாம்ʼ வினிமய꞉. ஆனால் நாம் தெய்வத்தை நிறுவும் போது, உண்மையில் அந்த உருவம், கிருஷ்ணரின் நித்தியமான உருவம், யாரும் வணங்குவதில்லை. அவர்கள் இறந்தவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பார்கள். எவ்வாறு என்றால் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போல."
710806 - சொற்பொழிவு SB 01.01.01 - இலண்டன்