TA/720322 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 07:17, 8 July 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“வைகுண்ட லோகத்தில் பாராட்டுதல் இருக்கிறது, பௌதிக உலகத்தில் பொறாமை இருக்கிறது. ஒரே விஷயம் வைகுண்ட தரத்திற்கு மாறும்போது, அது வேறொரு விஷயமாக மாறுகிறது; அது மத்ஸரதா அன்று. அது பாராட்டுதல்: “ஓ அவன் மிகவும் நல்லவன்.” ராதாரணியை போன்று. ரதாராணியை விட யாரும் உன்னதமான பக்தராக முடியாது. க்ருஷ்ண அநயாராத்யதே. ராதாராணி என்றால் கிருஷ்ணரை வழிபடுபவர் என்று பொருள், அதிஉன்னத சேவை. கோபியர்களுள்— கோபியர்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்கின்றனர்— அதற்கு ஈடு இணையே கிடையாது. சைதன்ய மகாபிரபு, ரம்யா காசித் உபாஸனா வ்ரஜ-வதூ-வர்கேண யா கல்பிதா (சைதன்ய-மஞ்ஜுஸ). வ்ரஜ-வதூ, இடையர்குல கன்னிப்பெண்கள் கிருஷ்ணரை வழிபடுவதற்கு ஈடு இணை இந்த உலகில் கிடையாது.”
720322 - சொற்பொழிவு SB 01.01.01-2 - மும்பாய்