TA/720406 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:08, 8 July 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே வேதத்தின்படி, பகவான் வருகிறார், மேலும் அவர் தான் வந்த காரணத்தை தானே கூறுகிறார்: யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி (ப.கீ. 4.7). மதக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், அவர் வருவார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி, அப்யுத்தானம் அதர்மஸ்ய. மேலும் மத செயல்முறைகளில், முரண்பாடுகள் ஏற்படும் போழுதெல்லாம், மதச்சார்பற்ற செயல்முறைகள் அதிகரிக்கும். அது இயற்கையே.

எப்பொழுதெல்லாம் கடுமையற்ற அரசாங்கம் இருக்கிறதோ, அப்பொழுது முரடர்கள் மேலும் திருடர்கள் அதிகரிப்பார்கள். அது இயற்கையே. மேலும் அரசாங்கம் கடுமையாக இருந்தால், பிறகு முரடர்கள் மேலும் திருடர்கள் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுவார்கள். எனவே கிருஷ்ணர் வந்த சமயத்தில், அவருக்கு இரண்டு வேலைகள் இருந்தன: பரித்ராணாய ஸாதூனாம்ʼ விநாஷாய ச துஷ்க்ருʼதாம் (ப.கீ 4.8)—பக்தர்களுக்கு, நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு, மேலும் அரக்கர்களை அழிப்பதற்கு."

720406 - சொற்பொழிவு at Christian Monastery - மெல்போர்ன்