TA/720503 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டோக்கியோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:42, 10 July 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“நாம் ஒரு புது பக்தனிடம் அவனது கடந்த கால அனுபவங்களின் காரணமான சில தீய பழக்கவழக்கங்களை கண்டாலும், அவனை அபக்தனாக நினைக்கக் கூடாது. ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய꞉ (BG 9.30). அவன் கிருஷ்ண உணர்வில் இருப்பானாயின்—அவன் ஒரு சாது. ஒரு பக்தனிடம் தற்போது தெரிகின்ற தீய பழக்கங்கள், மறைந்துவிடும். எனவே, நாம் வாய்ப்பை வழங்க வேண்டும். ஒரு பக்தனிடம் சில தீய பழக்கவழக்கங்களை கண்டதால் அவனை நிராகரிக்க கூடாது. நாம் இன்னுமோரு வாய்ப்பை அளிக்க வேண்டும். அவன் சரியான விஷயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதால் நாம் இன்னுமோரு வாய்ப்பை அளிக்க வேண்டும், ஆனால் அவனது கடந்த கால நடத்தை காரணமாக அவன் மீண்டும் மாயையின் பிடிக்குள் செல்வதாகத் தோன்றுகிறது. எனவே, நாம் நிராகரிக்க கூடாது, மாறாக வாய்ப்பை அளிக்க வேண்டும். ஒருவன் தரத்தை அடைவதற்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக காலத்தை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் நாம் அவனுக்கு வாய்ப்பை அளிக்க வேண்டும். அவன் கிருஷ்ண உணர்வில் இருப்பானாயின், எல்லா குறைபாடுகளும் வெகுசீக்கிரமாக மறைந்துவிடும். க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா (BG 9.31). அவன் ஒரு பூரணமான தர்மாத்மாவாக, மகாத்மாவாக ஆகுவான்.”
720503 - சொற்பொழிவு SB 02.09.13 - டோக்கியோ