TA/720701 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் டியாகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 10:48, 24 July 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்

“கிருஷ்ணர் எல்லோருக்குமானவர். உங்களது ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ‘கிருஷ்ணர் ஒரு இந்து கடவுள்’ என்று எண்ண வேண்டாம். அவர் இந்துவும் அன்று முஸ்லிமும் அன்று கிறிஸ்தவரும் அன்று. அவர் கடவுள். கடவுள் இந்துவும் அன்று முஸ்லிமும் அன்று கிறிஸ்தவமும் அன்று. ‘நான் இந்து, நீர் கிறிஸ்தவன்’ என்பதெல்லாம் உடல்சார் அடையாளங்கள். இந்த உடல் ஒரு உடையை போன்றது. உங்களுக்கு கருப்பு கோட்டு இருக்கிறது, இன்னொருவனிடம் வெள்ளை கோட்டு இருக்கிறது. நாம் வெவ்வேறு கோட்டுகள் அல்லது சர்ட்டுகளில் இருப்பதால் நாம் வேறானவர்கள் என்று அர்த்தப்படாது. மனிதர்கள் எனும் அடிப்படையில், நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். நாம் எல்லோரும் ஒன்று. அதுவே கருத்து. தற்போதைய தருணத்தில் சர்ட்டுகள் மற்றும் கோட்டுகளின் அடிப்படையில் இந்த உலகை நாம் பிரித்துள்ளோம். அது நல்லதன்று. உண்மையில் முழு உலகமும் அல்லது முழு பிரபஞ்சமும் கடவுளுக்கு சொந்தமானது. இதுவே கிருஷ்ண உணர்வு.”

720701 - சொற்பொழிவு Hare Krishna Festival - சான் டியாகோ