TA/721012 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மணிலா இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 11:50, 20 August 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1972 Category:TA/அமிர்தத் துளிகள் - மணிலா {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/72101...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கலக்கமடையாத ஒருவர், அவர் தீர என்று அழைக்கப்படுகிறார். ஆனால் ஒரு மனிதன் இறந்ததும், அவனுடைய உறவினர்கள் புலம்புகின்றனர், "ஓ, என் தந்தை போய்விட்டார்," "என் சகோதரி போய்விட்டார்," என் மனைவி..." ஆனால் நீங்கள் தீரவாக மாறினால், பிறகு நீங்கள் மனக்குழப்பம் அடையமாட்டீர்கள். எவ்வாறென்றால் உங்கள் நண்பர் அல்லது உங்கள் தந்தை இந்த அடுக்குமாடியிலிருந்து மற்றொன்றுக்கு மாறினால் யார் புலம்புவார்? இல்லை, அதனால் பரவாயில்லை. அவர் இந்த அடுக்குமாடியில் இருந்தார், இப்போது மற்றொன்றுக்கு போய்விட்டார், எனவே புலம்புவதற்கோ அல்லது கலக்கமடையவோ வாய்ப்பில்லை. அதேபோல், ஆன்மா ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு இடமாற்றம் செய்யும், என்ற காரணத்தை அறிந்த ஒருவர், அவருடைய நண்பர் அல்லது உறவினரின் மரணத்தைக் கண்டு புலம்பமாட்டார். அவர் அனைத்தும் அறிவார், மேலும் ஷாஸ்த்ரப்படி அவர் நண்பன் எங்கு சென்றிருக்கிறான் என்று அவர் அறிவார்."
721012 - சொற்பொழிவு BG 02.13 - மணிலா