TA/730707 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:18, 13 February 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - இலண்டன் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ண பக்தி இயக்கம் பொறாமை கொண்டவர்களுக்கானதல்ல. இது மக்களுக்கு பொறாமை கொள்வதை தவிர்க்க கற்றுக் கொடுக்கும் ஒரு இயக்கம். இது ஒரு முதல் தரமான அறிவியல் இயக்கம். பொறாமை கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆகையினால் ஸ்ரீமத் பாகவதம் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துகிறது, தர்ம꞉ ப்ரோஜ்ஜித-கைதவோ அத்ர (SB 1.1.2). ஸ்ரீமத் பாகவதத்தில், தர்ம, மதக் கோட்பாடுகள், ஏமாற்று வகையான மதக் கோட்பாடுகள் முற்றிலும் ஒழிக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது, ப்ரோஜ்ஜித. விரட்டியடிக்கப்படுகிறது, ப்ரோஜ்ஜித. எவ்வாறென்றால், அறையில் இருக்கும் அழுக்கான பொருள்களை எல்லாம் திரட்டி, துடைத்து, அறையில் வைத்துக் கொள்ளாமல் ஒழித்துக்கட்டுவது போல அறையினுள் வைத்துக் கொள்ளாதீர்கள். அதேபோல், ஏமாற்று வகையான மத அமைப்பு—ஒழித்துவிடுங்கள். அது இவ்வகையான மதமல்ல, "இந்த மதம்," "அந்த மதம்." எந்த மத அமைப்பாக இருந்தாலூம், அவர்கள் பொறாமை கொண்டவர்களானால், அது மதம் அல்ல."
730707 - சொற்பொழிவு BG 01.01 - இலண்டன்