TA/731002 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:44, 17 October 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் இதை தவறாக கொள்ளக் கூடாது அதாவது செயல்பாடுகள் துறையை என்னுடைய அடையாளமாக கண்டுக் கொள்ளக் கூடாது. அது நடந்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை ஒரு விவசாயியாக, உங்களிடம் ஒரு சிறிய நிலம் இருந்து, மேலும் உங்கள் உணவு தானியங்களை நீங்கள் பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் உற்பத்தி செய்தால். அது முக்கியமல்ல. அதேபோல், இந்த உடலை நாம் பயன்படுத்துகிறோம். நாம் நடைமுறையில் காணலாம். அனைவரும் பம்பாய் நகரில் இந்த உடலுடன் வேலை செய்கிறார்கள். மிகவும் ஏழையான ஒருவனும் பம்பாய் நகரில் இருக்கிறான், மேலும் மிகுந்த செல்வந்தன் ஒருவனும் அங்கிருக்கிறான். இருவருக்கும் வேலை செய்ய ஒரே மாதிரியான வசதிகள் இருக்கின்றன, ஆனால் நாம் காண்கிறோம் அதாவது ஒருவன் இரவு பகலாக மிகவும் கடினமாக வேலை செய்கிறான். அவனுக்கு உணவு துண்டு கிடைப்பது அரிதாக உள்ளது. இன்னொரு மனிதன், சும்மா சென்று, அலுவலகத்தில் உட்கார்ந்துக் கொண்டு, ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கிறான். ஏன்? ஏனென்றால் செயல்பாட்டு துறையின் வேறுபாடுகளால். உடல் வேறுபட்டது."
731002 - சொற்பொழிவு BG 13.08-12 - மும்பாய்