TA/740115 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 16:14, 16 February 2024 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - ஹானலுலு {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சனாதன தர்மம் என்றால் நித்தியமான மதம். மனிதனின் மதம் ஒன்றே. அதுவே சனாதனம் . எனப்படுகிறது. ஒரு உயிர்வாழியானது சனாதன என்று விவரிக்கப்படுகிறது. மமைவாம்ஷோ ஜீவ-பூதோ ஜீவ-லோகே ஸனாதன꞉ (BG 15.7). பகவத் கீதையில் சனாதனத்ததை காணலாம், கிருஷ்ணர் கூட பதினோராவது அத்தியாயத்தில் ஸனாதனஸ் த்வம் என்று விளிக்கப்படுகிறார். மேலும் இன்னொரு இடம், ஆன்மீக உலகமும் சனாதனம் என்று அழைக்கப்படுகிறது. பகவத் கீதையில், பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸனாதன꞉ (BG 8.20) என்பதை காணலாம். எனவே இந்த சனாதனம் எனும் வார்த்தை முக்கியம். உயிர்வாழி சனாதனம், கடவுள் சனாதனம், ஆன்மீக உலகமும் சனாதனம், இழந்த உறவை மீண்டும் நிலைநாட்டி வீடுபேறு பெற்று கடவுளிடம் திரும்பும் செயல்முறை சனாதன தர்மம் எனப்படும். அதுவே கடவுளுடனான நமது நித்திய உறவு."
740115 - சொற்பொழிவு SB 01.16.19 - ஹானலுலு