TA/740404 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:02, 3 April 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
:ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தார(அ) ஸர்வ தேஶ
யாரே தேக, தாரே கஹ (அ)க்ருʼஷ்ண(அ)-உபதேஶ
(CC Madhya 7.128)

"இது சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம். அவர் கூறுகிறார், 'நீ ஒரு ஆன்மீக குருவாக மாறு'. 'எவ்வாறு? எனக்கு எந்த தகுதியும் இல்லை.' 'இல்லை. நீ சும்மா என் கட்டளையை ஏற்றுக் கொள்.' 'ஆக உங்கள் கட்டளை என்ன, ஐயா? யாரே தே², தாரே கஹ (அ)க்ருʼஷ்ண(அ)-உபதேஶ: 'நீங்கள் வெறுமனே, சந்திக்கும் யாராக இருந்தாலும், அவர்களிடம் கிருஷ்ணரின் அறிவுரைகளைப் பற்றி பேசுங்கள். பிறகு நீங்கள் ஒரு ஆன்மீக குருவாவீர்கள்'. எனவே உண்மையில் இது நடந்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் அற்புதமான மனிதர் அல்ல. ஆனால் எங்கள் ஒரே வேலை யாதெனில், ஆதாவது கிருஷ்ணர் பேசியிருக்கும் அதே விஷயத்தை தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். அங்கே மந்திரம் இல்லை. இதுதான் அந்த மந்திரம். நீங்கள் ஒரு போக்கிரியாக முட்டாள்தனமாக கலப்படம் செய்தால், பிறகு நீங்கள் ஆன்மீக குருவாக முடியாது. நீங்கள் வெறுமனே கிருஷ்ணர் பேசியதை பின்பற்றினால், நீங்கள் ஆன்மீக குருவாகலாம். மிகவும் சுலபமான காரியம். இதற்கு படிப்பு தேவையில்லை. கிருஷ்ணர் கூறியதை உங்கள் ஆன்மீக குருவிடமிருந்து நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். இதற்கு எழுத்தறிவுகூட தேவையில்லை. அங்கே பல பெரிய ஆளுமைகள், புனிதமான மனிதர்கள் இருந்தார்கள். என் குரு மஹாராஜரின் குரு மஹாராஜ, அவர் படிப்பறிவில்லாதவர், கௌர கிஸ்ஹோர தாஸ பாபாஜீ மஹாராஜ. அவரால் தன் பெயரை கூட கையெழுத்திட முடியவில்லை. ஆனால் என் குரு மஹாராஜ ஒரு சிறந்த அறிஞர். அவரை தன் குருவாக ஏற்றுக் கொண்டார்."

740404 - சொற்பொழிவு BG 04.15 - மும்பாய்