TA/740602 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஜெனிவா இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - ஜெனிவா {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/74...")
 
(No difference)

Latest revision as of 14:22, 1 May 2024

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
குரு-கௌராங்க: இங்குள்ள மக்கள் மிகவும் பாவம் நிறைந்தவர்கள் என்றால், அவர்களுக்கு எவ்வாறு பல சிறந்த வசதிகள் கிடைத்திருக்கிறது? அது விரைவில் போய்விடும், மிக விரைவில்.

பிரபுபாதர்: ஆம். ஆம். அவர்களுடைய பாவச் செயல்கள் அதிகரிக்கும் பொழுது, இந்த வசதிகள் எடுத்துக் கொள்ளப்படும். ஆகையினால் நாங்கள் முன்மொழிகின்றோம் அதாவது 'அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானது, மேலும் நாம் அனைவரும் கிருஷ்ணரின் மகன்கள். சும்மா கிருஷ்ண உணர்வில் ஒத்துழையுங்கள், பிறகு உலகம் முழுவதும் ஆனந்தம் அடையும்'. இதுதான் எங்கள் முன்மொழிவு. நீங்கள் ஏன் அது அமெரிக்கன், அது சுவிஸ், அது இந்தியன் என்று நினைக்கிறீர்கள்? அனைத்தும் கிருஷ்ணருக்கு சொந்தமானது. நாம் கிருஷ்ணருக்கு கீழ்ப்படிவோம், மேலும் நாம் கிருஷ்ணரின் மகன்கள் ஆனபடியால், கிருஷ்ணரின் சொத்துக்களை அனுபவிக்கலாம் வாருங்கள். அங்கே உடனடியாக மகிழ்ச்சி கிடைக்கும். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் அதாவது அந்த..., இருப்பினும் உலகம் முழுவதிலும் மிகவும் அதிகமாக தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம், ஜனத்தொகையில் பத்து மடங்கு மக்களுக்கு உணவளிக்க முடியும். பத்து மடங்கு. ஆப்ரிக்காவில், ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில், அமெரிக்காவில், நிறைய, நான் சொல்வதாவது, உணவு உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் ஒத்துழைக்கமாட்டார்கள். அவர்கள் விலங்குகளை கொல்லுவார்கள். தானியங்களை கடலில் வீசுவார்கள் மேலும் கோருவார்கள், 'அது என் நிலம். அது என் சொத்து'.

740602 - காலை உலா - ஜெனிவா