TA/Prabhupada 0101 - நம் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நித்தியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக

Revision as of 00:52, 21 September 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0101 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Con...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Press Conference -- April 18, 1974, Hyderabad

விருந்தாளி (1): கிருஷ்ணர் உணர்வின் இறுதியான குறிக்கோள் என்ன? பிரபுபாதர்: ஆம், இறுதியான குறிக்கோள் யாதெனில், அதாவது, இல்லை, நான் கூறுவது, இறுதியான குறிக்கோள், அதாவது அங்கே ஆன்மாவும் கருப்பொருளும் இருக்கிறது. அங்கே பௌதிக உலகம் இருப்பது போல், ஆன்மீக உலகமும் இருக்கிறது. பரஸ்தஸ்மாத்து பாவோ 'ன்யோ வ்யக்தோ'வ் யக்த்தாத் ஸநாதன: (ப.கீ.8.20). ஆன்மீக உலகம் நித்தியமானது. பௌதிக உலகம் தற்காலிகமானது. நாம் ஆன்மீக ஆத்மா. நாம் நித்தியமானவர்கள். ஆகையினால் நம் வேலை மறுபடியும் ஆன்மீக உலகத்திற்குச் செல்வதாக்கும், நாம் இந்த ஜட உலகிலேயே இருந்து கொண்டு, உடலை கெட்டதிலிருந்து மேலும் மோசமாகி, அல்லது மோசமானதிலிருந்து கெட்டதிற்கும் அல்லது நல்லதிற்கும் மாற்றிக் கொண்டிருப்பதல்ல. அது நம் வேலையல்ல. அது ஒரு நோய். நம் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நித்தியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக ஆகும். யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (ப.கீ.15.6). பாருங்கள், நம் மானிட வாழ்க்கை அந்த பூரணத்துவ நிலையை அடைய பயன்படுத்தப்பட வேண்டும் - நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய இந்த ஜட உடலை மறுபடியும் பெறக்கூடாது. இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். விருந்தாளி (2): அந்த பூரணத்துவத்தை ஒருவர் வாழ்க்கையில் பெறுவது சாத்தியமா? பிரபுபாதர்: ஆம், ஒரு நொடியில், நீங்கள் சம்மதித்தால். கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது, ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (ப.கீ.18.66). நம் பாவச் செயல்களுக்கு ஏற்ப நம் உடலை மாற்றிக் கொள்கிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்து, மேலும் கிருஷ்ணர் உணர்வை ஏற்றுக்கொண்டால், உடனடியாக நீங்கள் ஆன்மீக தளத்தில் இருப்பீர்கள். மாம் ச யோ(அ) வ்யபிசாரேண பக்தி-யோகேன ஸேவதே ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே. (ப.கீ.14.26). கிருஷ்ணரின் தூய பக்தர் ஆனவுடனேயே நீங்கள் உடனடியாக இந்த ஜடதளத்திலிருந்து உயர்ந்தெழுவீர்கள். ப்ரஹ்ம-பூயாய கல்பதே. அந்த ஆன்மீக தளத்திலேயே தொடர்ந்து இருப்பீர்கள். மேலும் நீங்கள் ஆன்மீக தளத்தில் மரணம் அடைந்தால், பிறகு நீங்கள் ஆன்மீக உலகத்திற்கு செல்வீர்கள்.