TA/Prabhupada 0101 - நம் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நித்தியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக

Revision as of 07:23, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Press Conference -- April 18, 1974, Hyderabad

விருந்தினர் (1): கிருஷ்ண உணர்வின் இலக்கு என்ன? பிரபுபாதர்: ஆம், இறுதியான இலக்கு என்னவென்றால்... இலக்கை நான் விளக்குகிறேன், அதாவது ஆத்மா இருக்கிறது மற்றும் இந்த ஜட இயற்க்கை இருக்கிறது. மற்றும், இந்த ஜட உலகம் இருப்பது போல், ஆன்மீக உலகமும் இருக்கிறது. பரஸ் தஸ்மாத் து பாவஹ அன்யஹ அவ்யக்த: அவ்யக்தாத் ஸநாதன: (பகவத் கீதை 8.20). ஆன்மீக உலகம் நித்தியமானது. பௌதிக உலகம் தற்காலிகமானது. நாம் ஆன்மீக ஆத்மா. நாம் நித்தியமானவர்கள். ஆக ஆன்மீக உலகத்திற்கு திரும்பிச் செல்வது தான் நம் கடமை, இதே ஜட உலகிலேயே இருந்து, மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலையிலோ அல்லது சுமாரான நிலையில் உள்ள வேறொரு உடலை மீண்டும் மீண்டும் பெறுவதல்ல. அது நம் வேலையல்ல. அது ஒரு நோய். நம் ஆரோக்கியமான வாழ்க்கை, நித்தியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (பகவத் கீதை 15.6). அந்த உன்னதமான நிலையை அடையவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் - மீண்டும் ஒரு ஜட உடலை பெரும் வகையில் அல்ல. இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். விருந்தினர் (2): அந்த உன்னத நிலையை ஒரே வாழ்க்கையில் பெறுவது சாத்தியமா? பிரபுபாதர்: ஆம், ஒரு நொடியில், நீங்கள் சம்மதித்தால். கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (பகவத் கீதை 18.66). நம் பாவச் செயல்களின் காரணத்தால் நமக்கு இந்த உடலை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்து, கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொண்டவுடன், நாம் ஆன்மீக தளத்தை அடைகின்றோம். மாம் ச யோ(அ) வ்யபிசாரேண பக்தி-யோகேன ஸேவதே ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே. (பகவத் கீதை 14.26). கிருஷ்ணரின் தூய பக்தர் ஆனவுடனேயே நீங்கள் இந்த பௌதிக தளத்திற்கு அப்பால் செல்கிறீர்கள். ப்ரஹ்ம-பூயாய கல்பதே. அந்த ஆன்மீக தளத்திலேயே தொடர்ந்து இருப்பீர்கள். மேலும் நீங்கள் அந்த ஆன்மீக தளத்தில் மரணம் அடைந்தால், பிறகு நீங்கள் ஆன்மீக உலகத்திற்கு செல்வீர்கள்.